இருக்கு ஆனா இல்ல... மோகன்லால் கல்யாணத்தில் நடந்த கலாட்டா... அவரு மாமனார் யார் தெரியுமா...

by Akhilan |
மோகன்லால்
X

மோகன்லால் – சுசித்ரா

மலையாள சினிமாவின் மன்னனாக இருக்கும் மோகன்லால் மற்றும் சுசித்ரா திருமண கலாட்டா குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

தனது 18வது வயதில் 1978 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான திரனோட்டம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்த படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கலால் அடுத்த வெளியான மஞ்சில் விரிஞ்சா பூக்களே இவரின் முதல் படமாக அமைந்தது. ஆரம்ப காலத்தில் அதிக வில்லத்தனமாக ரோலிலே மோகன்லால் நடித்து வந்தார். அதை தொடர்ந்து, ராஜாவிண்டே மகன் என்ற திரைப்படம் இவரை முன்னணி நடிகராக ஆக்கியது.

மோகன்லால்

மோகன்லால் - சுசித்ரா

இந்நிலையில், தான் தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜி அவரின் மகள் சுசித்ராவிற்கு மோகன்லால் அறிமுகம் கிடைத்திருக்கிறது. முதலில் நெகட்டிவ் வேடங்களில் நடித்தவரை பிடிக்கவே இல்லையாம் சுசித்ராவிற்கு. அதை தொடர்ந்து, ஹீரோவானவுடன் அவரின் மீது ஒரு பிரியம் வந்திருக்கிறது.

இதை தனது குடும்பத்தினரிடம் நேராக சொன்ன சுசித்ராவின் முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்ததாம். ஒரு நடிகரையா காதலிக்கிறாய் எனக் கேட்டார். ஆனால் அவரின் தந்தையோ அவரின் விருப்பத்திற்கு துணையாக இருந்தாராம். இதை தொடர்ந்து மோகன்லால் வீட்டில் பேசி இருக்கிறார்கள். ஆனால் ஜாதக பொருத்தம் பார்த்ததில் இருவருக்கும் பொருத்தம் இல்லை என ஜோசியர்கள் கூறிவிட்டனர்.

k balaji

k balaji

இதனால் இரு வீட்டாரும் இந்த திருமண விஷயத்தை கைவிட்டனர். ஆனால் சுசித்ரா பிடிவாதமாகவே இருந்து இருக்கிறார். இரண்டு வருடம் கடந்தும் தன் காதலில் உறுதியாக இருந்திருக்கிறார். இது அவரின் தந்தைக்கே கவலை கொள்ள செய்ய அவர் தன் மருமகன் மோகன்லால் தான் என்பதில் உறுதியாகிவிட்டார். மோகன்லாலுக்கோ தனக்காக இரண்டு வருடமாக காத்திருந்த சுசித்ராவை நினைத்து பெருமையாகவே இருந்ததாம். இதை தொடரே இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சுசித்ரா தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து, அவரின் மாமனார் தான் பில்லா படத்தின் தயாரிப்பாளர். அந்த படத்தில் ஒரு சில காட்சியில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சிவாஜி கணேசனை வைத்து தமிழில் 17 திரைப்படங்களை தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story