விஜயின் கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட வசூலில் முன்னேறி வருகிறது.
விஜய், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான படம் கோட்.
கேப்டன் தொடங்கி தோனி, எஸ்கே என ஏகப்பட்ட கேமியோக்கள் இருந்தாலும் யுவனின் இசை, பரபரப்பில்லாத ஸ்கிரிப்ட் ஆகியவை படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க வழி வகுத்துள்ளன.
என்றாலும் ஜீவன்/ சஞ்சயின் நடிப்பு மற்றும் அடுத்த படத்திற்கான லீட் ஆகியவை இந்த படத்தினை பாக்ஸ் ஆபிஸில் இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தநிலையில் படத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
லவ்வர் மணிகண்டன் தான் கேப்டனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். பல குரல்களில் பேசுபவர் என்பதால் மணிகண்டனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் டைம் டிராவல், சயின்ஸ் பிக்ஷன் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்தன.
ஆனால் வெங்கட் பிரபு படத்தினை ஜவ்வாக இழுத்தது மற்றும் விறுவிறுப்பில்லாத திரைக்கதை ஆகியவற்றால் நடுநிலை மற்றும் பிற ரசிகர்களுக்கு படம் வொர்க் ஆகவில்லை.
என்றாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் ஆகியோருக்கு படம் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது பெரிய படங்கள் எதுவுமில்லாமல் இருப்பதால், முதலுக்கு மோசமில்லை என்றளவில் படம் தப்பித்து விடும்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…