ஓவர் சீன் போடும் வேலராமமூர்த்தி… ஆதி குணசேகரனுக்கு வேறு நடிகரை தேடும் சீரியல் குழு… செட்டாகுமா?

by Akhilan |
ஓவர் சீன் போடும் வேலராமமூர்த்தி… ஆதி குணசேகரனுக்கு வேறு நடிகரை தேடும் சீரியல் குழு… செட்டாகுமா?
X

Ethirneechal serial: ஆண்களை டிவி முன்னர் அமர்ந்து சீரியல் பார்க்க வைத்த எதிர்நீச்சல் சீரியலின் டாப் நாயகனான ஆதி குணசேகரன் யார் என்பது தான் தற்போது பலரிடமும் இருக்கும் கேள்வியாகி இருக்கிறது. தற்போது சீரியல் டீம் இந்த விஷயத்தினை வேகமாக முடிக்கும் நோக்கத்தில் இருக்கிறார்களாம்.

எதிர்நீச்சல் சீரியல் மற்ற நாடகங்களைப் போல இல்லாமல் சமூக எதார்த்தினை சொல்லி ஹிட் அடித்தது. பாசிட்டிவ்வாக நடித்து சிலர் பாராட்டுக்களை பெற்றாலும் நெகட்டிவ் ரோலில் பாராட்டப்பட்டவர் நடிகர் மாரிமுத்து. இவர் சமீபத்தில் திடீரென உயிரிழந்தார்.

இதையும் படிங்க: சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..

இதனால் இவரின் கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்ற சந்தேகம் பலரிடத்திலும் எழுந்தது. அந்த நேரத்தில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தான் நடிக்க இருப்பார் எனத் தகவல்கள் வெளியானது. பெரும்பாலானவர்கள் அவர் தான் சரியான சாய்ஸாக இருப்பார் என நம்பினர்.

இதை வேலராமமூர்த்தியே பேட்டியில் என்னிடம் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நானும் 20 நாட்களாக வீட்டு பக்கம் போகவில்லை. அந்த அளவு சினிமாவில் பிஸியாக இருக்கேன். இனி தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: நாம சும்மா இருந்தாலும் சுழி சும்மா இருக்காது! வேண்டாத வேலையால் ரஜினியிடம் வெறுப்பை சம்பாதிச்ச நடிகர்

ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து அதிக போர்ஷன்கள் மீதம் இல்லாததால் வெகு சீக்கிரமாக நடிகரை தேர்வு செய்ய வேண்டும். வேலராமமூர்த்தி லேட் செய்யும் காரணத்தால் ராதாரவி, பசுபதி உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நல்லாவா இருக்கும் என இப்போதே கிசுகிசுக்களும் எழுந்துவிட்டது.

வேல ராமமூர்த்தியின் நண்பர்கள் இந்த கதாபாத்திரத்தினை மிஸ் செய்யாதே. நடிக்கலாம் எனவும் அறிவுரை கூறி இருக்கின்றனர். மாரிமுத்துவிற்கு ஒரு மாதத்துக்கு இந்த சீரியலுக்கு 75 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம். வேல ராமமூர்த்தி சீரியலை ஓகே செய்யும் பட்சத்தில் அவருக்கு மேலும் அதிகமாக கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story