ஒருவழியா விஷயம் உடைய போகுது… பிக்பாஸ் அடுத்த ஹோஸ்ட் யார்..விஜய் டிவியின் பரபர அப்டேட்
Biggbosstamil: தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற தகவலை விஜய் டிவி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரே வீட்டில் 16 பிரபலங்கள் இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். முதலில் இந்தியில் கொடி கட்டி பறந்த இந்த நிகழ்ச்சி தற்போது தமிழில் 7 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு விட்டது. தற்போது 8 வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: பாலியல் புகார்!.. நடிகர்களுக்கு முதுகெலும்பே இல்லை!.. விளாசிய நடிகை!…
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முதல் காரணமே கமல்ஹாசன்தான். அவரே சின்னத்திரைக்கு வருகிறார் என்றால் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் தான் முதன்முதலில் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் அவரின் பேச்சுக்கு அப்ளாஸ்கள் பறந்தது.
ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக கமல்ஹாசன் மீது ரசிகர்கள் வெறுப்பை கொட்டி வருகின்றனர். அதிலும் கடந்த சீசனில் பிரபல போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதால் கடைசிவரை அவரை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய் டிவி பிரபலங்களே மேடையில் கமல் குறித்து அவதூறாக பேசியதும் நடந்தது.
இதில் கமல்ஹாசனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதைத்தொடர்ந்து தற்போதைய சீசனில் தான் தொகுத்து வழங்கப்போவதில்லை. இதற்கு தன்னுடைய சினிமா படப்பிடிப்புகளை காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது பல பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த்தான் நடிக்கனும்னு கட்டாயம் ஏன்! அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்
இருந்தும் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும். அதனால் முதல் ப்ரோமோ உடனே வெளியிடப்பட வேண்டும் என்ற நிலையில் பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் நடிகர் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
சமீபத்தில் அவர் இடம்பெறும் முதல் புரோமோ பாண்டிச்சேரியில் சூட் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு யார் அந்த பிக் ஹோஸ்ட் என்பதை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியின் அப்டேட்: https://x.com/vijaytelevision/status/1831222018941014504