எனக்கு நெருக்கமான தோழன், தோழி இவர்கள்தான்!.. யாருமே யோசிக்க முடியாத மாதிரி சொல்லிட்டாரே ரஜினி!
Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு வந்ததுக்கு அவர் நண்பர் ராஜ்பகதூர் தான் காரணம் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அதே ரஜினியிடம் உங்கள் ஆத்மார்த்த நண்பர் யாரென்று கேட்டால் வேறு மாதிரியான ஒரு பதிலை தான் தருவாராம்.
ரஜினியிடம் ஒருமுறை உங்கள் ஆத்மார்த்த தோழன் மற்றும் தோழி யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஆத்மார்த்தம் வேறு.. நெருக்கம் வேறு.. எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் ஆத்மார்த்தமான நண்பர் யார் என்று கேள்வி எழும்போது அவன் ஒருவன் தான்.
இதையும் படிங்க: விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ
அவன் பெயர் சிவாஜி ராவ். என்னடா தோழன் பெயரை கேட்டால் என்னுடைய பழைய பெயரை சொல்கிறேன் எனச் சிலர் கேலி செய்வார்கள். ஆனால், ரஜினியான என்னை பின்னால் இருந்து முன்னே தள்ளுபவன் சிவாஜி ராவ் தான். அதற்கு மனசாட்சி என இன்னொரு பெயரும் உண்டு.
அவனோடு நான் என் சம்மந்தப்பட்ட விஷயங்களை, உணர்வுகளைப் பகிர்வது எது எனக் கேட்டால் என் உறக்க நேரம்தான். ஏனெனில், எனக்கு தூக்கம் தொடங்கும் முன்னும், தூங்கும் நேரத்தில் தான் அவனுடன் இருக்க தனிமை கிடைக்கிறது. அந்தத் தனிமையில் என் ஆத்மார்த்த தோழனோடு என்னால் பேச முடியும்.
இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?
ஆத்மார்த்த தோழி யார் என்ற கேள்வி வரும் போது, நிறைய பெண்களுடன் பழகி இருக்கேன். இதில் சிலரோட பழகி, சிலரோட உறவாடி, சிலரோடு நெருக்கமாக நடித்துமிருக்கிற என் முன்னால் திடீரென மின்னலாய் வந்து, என் மனதில் இடம் பிடித்து இன்று மனைவியாகி இருப்பவள் லதா. அவளே என் ஆத்மார்த்தமான தோழி, மனைவி, தாய் மற்றும் சகோதரி என தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார்.