அந்த விஷயத்தில் கமல், விஜய், சூர்யா, தனுஷை விட முந்திய நடிகர் யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரை ஆக்ஷன் படங்களுக்குத் தான் எப்போதுமே கிராக்கி. அந்த வகையில் தமிழ்ப்படங்களில் நடிகர் விஜய் அதைத் தக்க வைத்துக் கொண்டார். அதே போல தெலுங்கு பட உலகம் என்றாலே ஆக்ஷன் தான். அது அந்தக் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள விஷயம் தான். இப்போது அங்கு பல முன்னணி நடிகர்கள் இந்த வகையில் இருந்தாலும் மகேஷ்பாபுவுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். இப்போது சமூகவலைதளங்களிலும் இருவருக்கும் மவுசு அதிகரித்து வருகிறது. இருவருமே ஆக்ஷனிலும், டான்ஸிலும் கிங் தான். இவர்களில் யாருக்கு முதலிடம் என்று பார்ப்போம்.
தளபதி விஜயைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாவைத் தொடங்கினார். லியோ படத்தில் இருந்து தனது போட்டோவை ஹலோ நண்பாஸ் அண்டு நண்பிஸ் என்ற தலைப்புடன் வெளியிட்டார். அவரது முதல் போஸ்ட்டுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன.
24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாவில் 3.9 மில்லியன் பாலோயர்களைப் பெற்றார். 99 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோயர்களைப் பெற்று சாதனை படைத்தார். டுவிட்டரில் விஜய்க்கு 4.7 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர்.பார்வையாளர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்தது. இதே போல டுவிட்டரில் விஜய்க்கு 4.7 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.
மகேஷ்பாபுவை எடுத்துக் கொண்டால் அவரது தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைல், ஆளுமை, கவர்ச்சி என பல சிறப்பம்சங்களால் ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாகி உள்ளனர். தெலுங்கு சினிமாவின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் இவர் தான். 5 பிலிம்பேர் விருதுகளையும் 8 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது இவரது இன்ஸ்டாவில் 12.2 மில்லியன் பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர் தனது இன்ஸ்டாவை 2018லேயே தொடங்கி விட்டார்.
டுவிட்டர் கணக்கில் 13.1 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். இந்த சாதனையை அடைந்த முதல் டோலிவுட் நடிகர் இவர் தான். அதே நேரம் அவருடன் கணக்குத் தொடங்கிய கமல், சூர்யா, தனுஷ் ஆகியோரையும் முந்தியவர் இவர் தான். இவர்களில் தனுஷ் 11.1 மில்லியன், சூர்யா 8.3 மில்லியன், கமல் 7.5 மில்லியன் பாலோயர்களுடன் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபுவின் இந்த வெற்றிக்குக் காரணமாக சொல்லப்படுவது அவரது ஆளுமை மற்றும் திறமை தான். இந்த வெற்றிக்காக தனது ரசிகர்களை முழுமனதுடன் பாராட்டியுள்ளார். அதனால் தான் அவரது பாலோயர்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளது. தளபதி விஜய்க்கும், மகேஷ்பாபுவுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளதால் அவர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வார்த்தைகளால் போரைத் தொடுத்து வருகின்றனர்.