ட்ரெண்ட்டான சக்கு சக்கு பாடல்... ஆனா இசையமைப்பாளர் யார் தெரியுமா? அட நம்ம சமையல்காரரு!

by Akhilan |
ட்ரெண்ட்டான சக்கு சக்கு பாடல்... ஆனா இசையமைப்பாளர் யார் தெரியுமா? அட நம்ம சமையல்காரரு!
X

கமல் நடிப்பில் மாஸ் ஹிட் வெற்றி படமான விக்ரமில் இடம்பெற்ற சக்கு சக்கு பாடலை இசையமைத்தது ஒரு சமையல்காரர் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தனது ஹிட் படங்களில் தமிழ் சினிமாவின் நாம் பிடித்து கேட்டு மறந்து போன பழைய பாடல்களை சரியான காட்சியில் புகுத்தி விடுவார். 2 நிமிடத்திற்கும் குறைவான நேரமே அந்த பாடல் வந்தாலும் நம்ம மனசில் சக்கென ஒட்டிக்கொள்ளும்.

Sakku sakku Song

அதற்கு அந்த காட்சியின் அழுத்தம் தான் காரணம். மாஸ்டர் படத்தில் ஒரு கடையில் கருத்த மச்சான் பாடலை ஓட விட்டு இருப்பார். கைதி படத்தில் அர்ஜூன் தாஸ் காவல் நிலையத்திற்குள் இறங்கி வரும்போது ஆசை அதிகம் வச்சு பாடல் ஓடும். ஆனால் இந்த இரண்டு பாடல்களும் கொடுக்காத ஒரு ஹிட்டை விக்ரமில் இடம்பிடித்த சக்கு சக்கு பாடல் கொடுத்திருக்கிறது.

அதற்கு ஒரு காரணம் கமலின் சண்டைக் காட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தது தான். சரி இந்த பாடலை தேவாவோ, இல்லை ரஹ்மானோ தான் இசையமைத்து இருப்பார்கள் எனத் தேடி பார்த்தால் கதையே வேறாக இருக்கிறது. ஜெயா தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதித்யன் தானாம். கிட்டாரிஸ்ட்டாக இருந்த ஆதித்யனும் முதல் முறையாக கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

adityan

முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாக இவருக்கு அமைந்தது. லக்கிமேன், மாமன் மகள், கிழக்கு முகம் என தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் எந்த படமும் அவருக்கு அமரன் கொடுத்த வரவேற்பினை கொடுக்கவில்லை. 25 படங்களுக்கு இசையமைத்த ஆதித்யன் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி படத்திற்கு இசையமைத்தார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஃபேஷன் ஐகானாக வலம் வந்த முதல் நடிகை!.. புதிய டிரெண்டை உருவாக்கிய துணிச்சலான நடிகை!…

இவரின் இன்னொரு வெற்றி படமாக அமைந்தது சீவலப்பேரி பாண்டி. வாழ்க்கை நாடகமா என்ற பாடலை கேட்காதவர்களே கிடையாது. இதை போல அருண் பாண்டியன் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தான் சக்கு சக்கு பாடலை இசையமைத்திருப்பார் ஆதித்யன். இந்த பாடல் அப்போது கொடுத்த வரவேற்பை விட இப்போது மிகப்பெரிய ரீச்சை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் ஆதித்யனால் பின்னால் ஜொலிக்கவே முடியவில்லை. 2017 டிசம்பர் தன்னுடைய 63ம் வயதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story