மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்ள காரணம் யார் தெரியுமா?

by Akhilan |
ரஜினிகாந்த்
X

rajinikanth

டிஸ்கவரி சேனல் பார்த்த எல்லா ரசிகர்களுக்குமே மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை ரசிக்காமல் இருக்க முடியாது. அதிலும் பியர் கிரில்ஸுடன் முன்னணி பிரபலங்கள் மட்டுமல்லாமல் உலக தலைவர்கள் பலர் இணைந்து சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.

மேன் வெர்சஸ் வைல்டு

மேன் வெர்சஸ் வைல்டு

பிரதமர் மோடி, ரஜினிகாந்த் ஆகியோர் இந்தியாவில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். இதில் ரஜினி கலந்துக்கொண்ட எபிசோட் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடந்தது. இந்த எபிசோட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தது இயக்குனர் பாலசந்தருக்காக தானாம்.

ரஜினிகாந்தினை அறிமுகப்படுத்திய கே.பி எப்போதுமே அவரின் முக்கியமான நேரங்களில் கைகோர்த்து விடுவார். ரஜினியின் 100வது படமான ராகவேந்திராவை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான் தயாரித்தது. அதுபோல டிஸ்கவரி சேனல் தரப்பில் இருந்து பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியில் ரஜினி வந்தால் நன்றாக இருக்கும் என பாலசந்தரிடம் கேட்டு இருக்கிறார்கள்.

கே பாலசந்தர்

கே பாலசந்தர்

அதுகுறித்து பாலசந்தர் ரஜினிகாந்தின் சம்மதத்தினை வாங்கிவிட. அவரின் கவிதாலயா நிறுவனம் மூலம் ரஜினிகாந்தினை பத்திரமா அழைத்து சென்று வந்திருக்கிறார்கள். இந்த தகவலை பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Next Story