விஜயின் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கெட் ஜாலில் மைதானத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் போது விஜய் தொடர்பான புகைப்படங்கள் வெளியானது. அதில் விஜய்க்கு அருகில் டத்தோ மாலிக் என்பவர் நின்று கொண்டிருந்தார். மலேசிய விமான நிலையத்தில் இறங்கியதுமே விஜய் அவரின் தோள் மீது கை போட்டு ஜாலியாக பேசிக்கொண்டே போனார். அதேபோல் மேடையிலும் அவரின் பெயரை சொன்ன விஜய் ஏற்பாடுகளை சரியாக செய்திருக்கிறார் அவருக்கு மிகவும் நன்றி என்று பேசியிருந்தார்.

எனவேதான் யார் இந்த டத்தோ மாலிக் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களுடைய எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த டத்தோ மாலிக். பிழைப்புக்காக மலேசியா சென்றவர் அங்கு ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
அதன்பின் படிப்படியாக வளர்ந்து இப்போது மலேசியால் ஈவெண்ட் மேனேஜ் நிறுவனம் நடத்தும் நபராக மாறியிருக்கிறார். சினிமா பிரபலங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை வைத்து மலேசியால் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும், சினிமா, நகை வியாபாரம் உள்ளிட்ட பல தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார்.

2023ம் வருடம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு குற்றச்சாட்டில் மலேசியா போலீஸ் இவரை கைது செய்தது.
பெரிய நடிகரின் திரைப்படங்களை வாங்கி மலேசியாவில் வெளியிட்டு வருகிறார். ரஜினியின் கபாலி படத்தை கூட இவர்தான் மலேசியாவில் வெளியிட்டார். அதேபோல் விஜயின் மாஸ்டர், லியோ போன்ற படங்களையும் மலேசியாவில் வெளியிட்டது இவர்தான். இப்போது ஜனநாயகன் படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமையையும் வாங்கியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நகை கடை திறப்பு விழாவுக்காக நடிகர் சிம்பு மலேசியா சென்றிருந்த போது அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது இந்த டத்தோ மாலிக்தான். ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வரும் ரசிகர்கள், பிரபலங்கள் வரும் பாதை, அவர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மற்றும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து அதை சிறப்பாக நடத்தி விஜயின் குட் புக்கில் இடம் பெற்றிருக்கிறார் இந்த டத்தோ மாலிக்.
