More
Categories: Cinema News latest news

யாஷின் அடுத்த இயக்குனர் சத்யராஜின் மகளா.. இவங்க மாதவனின் மனைவி தானே… குழப்பத்தில் ரசிகர்கள்

Geethu Mohandas: நேற்றில் இருந்து தமிழ் ரசிகர்களுக்கு யாஷின் அடுத்த இயக்குனர் குறித்த கேள்வி தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருந்து இருக்கும். யார் இந்த கீது மோகன்தாஸ் பார்த்த முகமாகவே இருக்குதே என யோசிக்காதவர்களே இருக்க முடியாது.

யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. கடந்த ஏப்ரல் 2022ல் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ரிலீஸானதை தொடர்ந்து அடுத்த படத்தினை அறிவிக்காமலே இருந்து வந்தார் யாஷ். யார் இயக்குனராக இருப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரஜினி மாறு வேஷத்தில் போய் பார்த்த சூர்யா படம்!.. என்ன சொன்னார் தெரியுமா?…

அதற்கு நேற்று தான் விடை தெரிந்தது. யாஷின் அடுத்த படம் டாக்ஸிக். இப்படம் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியானது. 2025 ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் என்று கூட அறிவிக்கப்பட்டது. இதையெல்லாம் விட படத்தினை இயக்க இருப்பது பெண் மலையாள இயக்குனரான கீது மோகன்தாஸ்.

அவர் யார் என பலரும் தேடலை பறக்கவிட்ட நிலையில் சில ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கீது மோகன்தாஸ் மலையாள டைரக்டர் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களுக்குமே ரொம்ப தெரிந்த முகம் தான். பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆன இயக்குனர்…! காமெடி நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

அவர் தான் கீது மோகன் தாஸ். இது குழந்தையில் என்றால் கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த திரைப்படம் நளதமயந்தி. இதில் மாதவன் வெளிநாட்டில் செட்டில் ஆக திருமணம் செய்யும் பெண்ணாக கீது நடித்து இருப்பார். அப்படத்திலுமே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரபல இந்தி ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவிக்கும் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியில் லையர் டைஸ், மலையாளத்தில் மூதூன் படங்களை மட்டுமே இவர் இயக்கி இருக்கிறார். இதனால் டாக்ஸிக் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தப்பா பேசிய பப்லு… ஆனால் அவருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.. மாஸ் தல நீங்க..!

Published by
Akhilan

Recent Posts