தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை! ரஜினி படத்தின் அடுத்த வில்லன் இவர் தான்!

by Akhilan |
தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை! ரஜினி படத்தின் அடுத்த வில்லன் இவர் தான்!
X

எப்போதும் ரஜினியின் ஒரு படம் முடிந்து பல மாதங்கள் கழித்து தான் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளிவரும். ஆனால் தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய ஜெய்லர் பட வெற்றியால் செம எனர்ஜியாக இருப்பதால் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் தான் ஜெய்லர். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு மாஸ் கம்பேக் படமாகி இருக்கிறது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ஏலே இருங்கல மண்ட சூடாகுது… கேட்கவே ஜோரா இருக்கும் தளபதி 68 கதை… ஆனா நடக்குமா?

ரஜினி170ஐ ஜெய்பீம் படத்தினை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். 35 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்து இருக்கிறார். இரவில் ஷூட்டிங் இல்லாமல் பார்த்துக்கோங்க என ரஜினி தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை கூட வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் ஜெய்லர் ஹிட் கொடுத்த அனிருத்தே இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது போலி எண்கவுண்டர் குறித்த கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மறுபடியும் அதே கேரக்டர் தானா?.. ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையுமே மிரட்டிய பகத் கண்டிப்பாக இந்த படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ரஜினியுடன், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க இருக்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான அமிதாப் தான் ரஜினியை பாலிவுட்டில் நடிக்க வைத்தவர். அவரின் எல்லா படங்களையுமே தமிழில் ரீமேக் செய்யும் போது ரஜினிதான் நடித்து இருக்கிறார். இதனால் 170ல் அமிதாப்பின் கதாபாத்திரமும் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.

Next Story