களத்தூர் கண்ணம்மாவில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர் தானாம்... அவர் வாய்ப்பை தான் கமல் தட்டிபறித்தாராம்...
கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் முதலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிறுமி ஒருவரை நடிக்க வைக்க ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணம் வரை கொடுத்து விட்டனராம். இதற்கிடையில் தான் கமல் தரப்பிற்கு அந்த வாய்ப்பு சென்றதாம். அந்த சிறுமியால் தான் பின்னாளில் கமலின் ஒரு முக்கிய படத்தில் நாயகி கிடைத்திருக்கிறார்.
அபிராமி அபிராமி என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கு கமலின் குணா படம் தான். சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ரோஷினி, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் ஒரு புதுமுக நாயகியை தொடர்ந்து தேடி வந்திருக்கின்றனர். அப்போது மும்பையில் இருந்த நடிப்பு பள்ளி மூலம் தான் ரோஷினி கிடைத்தாராம். ரோஷினியை விடுங்க அந்த பள்ளிக்கு கமலுடன் ஒரு தொடர்பு இருக்கிறது.
கமலின் முதற்படமான களத்தூர் கண்ணம்மா என்பது அனைவரும் அறிந்த சேதி தான். ஆனால் அவருக்கு முதலில் இந்த வாய்ப்பை ஏவிஎம் கொடுக்கவில்லை. அப்போது தெலுங்கு பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்த டெய்சி இரானிக்கு தான் இந்த வாய்ப்பு முதலில் சென்றது. 1957ம் ஆண்டு தமிழில் யார் பையன் என்ற படத்தில் சிறுமியான அவரை சிறுவனாக நடிக்க வைத்திருந்தனர். அவர் நடிப்பை பார்த்து பிரமித்த ஏவி மெய்யப்ப செட்டியார். அப்போதே அவருக்கு பத்தாயிரத்தை முன்பணமாக கொடுத்த களத்தூர் கண்ணம்மாவின் குழந்தை நட்சத்திரம் நீதான் என புக் செய்துவிட்டாராம்.
அதேவேளையில், நான்கு வயதான கமலை ஏவிஎம்மின் குடும்ப டாக்கடர் சாரா ராமச்சந்திரன் செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரியிடம் அறிமுகப்படுத்துகிறார். அப்போது தனது மகன் சரவணன் அழைத்து கமலை செட்டியாரிடம் கூட்டிப் போக சொல்கிறார். யார் பையன் படத்தில் டெய்ஸி இரானி நடித்த காட்சியை கமலை நடிக்க சொல்கிறார் செட்டியார். கமலும் தனது நடிப்பு திறமையை காட்ட, செட்டியாரே ஆடிவிட்டாராம். பத்தாயிரம் போனால் போகிறது என்று கமலை களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இந்த படத்தினை மிஸ் செய்த டெய்ஸி இரானியின் பள்ளியில் இருந்து வந்தவர் தான் குணா ரோஷினி என்பது குறிப்பிடத்தக்கது.