80களில் 3வது இடத்தைப் பிடிக்க போட்டி போட்ட நடிகர்கள்!.. ஜெயிச்சது யாருன்னு தெரியுமா?..
80களில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த 3ம் இடத்தை பிடிப்பதற்கு தமிழ்த்திரை உலகில் கடும்போட்டி நிலவியது.
விஜயகாந்த், மோகன் இருவரும் அந்த இடத்திற்காக மிகவும் போராடினர். மோகன் ரஜினியைப் போலவே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இளையராஜாவின் இசையால் மோகன் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆயின. அதே நேரம் விஜயகாந்துக்கும் இளையராஜா நிறைய டியூன்களைப் போட்டார். ஆனால் மோகன் அளவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. காரணம் மோகன் மைக்கைப் பிடித்த படி பாடும் கலைஞராகவே பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டார். அப்போது கார்த்திக், சத்யராஜ், பிரபு என பலரும் தொடர்ந்து பிரபலமாக இருந்தனர்.
மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் மோகன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். ரேவதி மோகனைத் தொட்டால் கம்பளிப்பூச்சியைத் தொட்ட மாதிரி இருப்பதாக சொல்கிறார். மோகனின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. ஆனால் கார்த்திக், ரேவதி காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆனது. பாலுமகேந்திரா கமல், மோகனை வைத்து கன்னடத்தில் கோகிலா என்ற படத்தை உருவாக்கினார். இதுதான் மோகனின் முதல் படம்.
எந்த ஒரு இயக்குனருமே மோகனை வைத்து ஹிட் கொடுத்து விட்டால் அவர்கள் அவரை மறந்து கமல், ரஜினி பக்கம் திரும்பி விடுகின்றனர். மோகனைப் போலவே ராமராஜனும் தமிழ்ப்பட உலகில் இருந்து காணாமல் போனார்.
ஆனால் 90கள் வரை 3ம் இடத்தில் நிலைத்து நின்றவர் விஜயகாந்த். பல ஹீரோக்களை அறிமுகப்படுத்தியவரும் அவரே. மோகன் அமலா இணைந்து நடித்த மெல்லத் திறந்தது கதவு படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். மோகனுக்குக் கடைசியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் இதுதான். இது 1986ல் வெளியானது. ராதா, அமலா, விசு, கமலா காமேஷ், செந்தில், நம்பியார், சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசை அமைத்த படம் இது. வா வெண்ணிலா, தேடும் கண் பார்வை, தில் தில் தில், குழலூதும் கண்ணனுக்கு, ஊரு சனம், சக்கர கட்டிக்கு, வா வெண்ணிலா என எந்தப் பாடலைக் கேட்டாலும் அது தேன் சொட்டு தான். அப்போதைய வானொலிகளில் நேயர் விருப்பமாக முதலில் வரும் பாடல் எது என்றால் இந்தப் படத்தில் உள்ள குழலூதும் கண்ணனுக்கு பாடல் தான்.