அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அஜித். அதன்பின் சில படங்களில் நடித்தார். நடிகர் விஜய் நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் விஜயின் நண்பராகவும் நடித்தார். அஜித்துக்கும் விஜய்க்கும் அப்போது தெரியாது. அப்படம்தான் அவர்கள் முதலும், கடைசியுமாக இணைந்து நடிக்கும் படம் என்று. இப்படம் 1995ம் ஆண்டு வெளியானது.
அப்படத்திற்கு பின் வசந்த் நடித்த ‘ஆசை’ படத்தில் நடித்தார் அஜித். அப்படம் வெற்றி பெற்று ரசிகர்களிடையே பிரபலமாக துவங்கினார் அஜித். இயக்குனர் வசந்த் விஜயை வைத்து இயக்கிய ‘நேருக்கு நேர்’படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் அஜித்தான். ஆனால், அப்படத்திலிருந்து அஜித் விலகினார்.
வளரும் நிலையில் இருந்த நடிகர் அஜித் ஏன் அப்படத்திலிருந்து விலகினார் என்பது பற்றி பார்ப்போம். விஜய் நடிக்கும் படத்தில் நாம் நடிக்கிறோம். நமக்கு விஜய்க்கு சமமாக காட்சிகள் இருக்குமா என்கிற சந்தேகம் அஜித்திற்கு வந்துள்ளது. படப்பிடிப்பு துவங்கி 2 நாட்கள் கழித்து இப்படத்தின் கதையை என்னிடம் கூறுங்கள் என வசந்திடம் அஜித் கேட்க, இயக்குனர் வசந்துக்கு கோபம் வந்துவிட்டது.
‘உனக்கு ஒரு ஹிட் கொடுத்த என்னிடமே கதை கேட்கிறாயா?.. வெளியே போ’எனக்கத்த அவமானத்துடன் அங்கிருந்து வெளியேறினார் அஜித். நேருக்கு நேர் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்து, அப்படம் மூலம் தன் வாழ்க்கை மாறுவதாக இருந்தாலும் சரி அப்படத்தில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்து வெளியேறினார் அஜித். அதன்பின்னரே சூர்யாவை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார் வசந்த்.
இப்படி பல அவமானங்களை தாண்டி வந்தவர்தான் தல அஜித். தற்போது ரஜினிக்கு பின் விஜய்க்கு சரி சமமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி தன்னை நிரூபித்துள்ளார் அஜித்.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…