Aishwarya Rai: ஆராத்யா ஐஸ்வர்யா ராய் தனியாக இருக்க காரணம்.. அபிஷேக் சொன்ன தகவல்

Published on: November 26, 2024
aishwarya rai
---Advertisement---

Aishwarya Rai: சினிமாவில் எத்தனையோ ஜோடிகள் மிகப் பிரபலமாக இருக்கிறார்கள். படங்களில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் ஏராளம். அவர்களில் ஒரு சில ஜோடிகள் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் ரசிகர்களின் அதிருப்தியை பெற்று வருகின்றனர். அதற்கு காரணம் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறும் போது ரசிகர்களுக்கு ஒரு வித சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

அதுவே பின்னாளில் விவாகரத்து என்ற ஒரு பிரச்சினைக்குள் வரும் போது சம்பந்தப்பட்டவர்களை விட அவர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைக்கும் ரசிகர்களுக்குதான் அதிக வருத்தத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு வளையத்திற்குள் சிக்கியவர்கள்தான் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன். இருவரும் காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: Game Changer: இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் படம்.. ‘கேம் சேஞ்சர்’ பற்றி ஷங்கர் சொன்ன புது தகவல்

இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு மிகவும் டீசண்டான கதைகளில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனும் படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா மட்டும் பொது இடங்களில் தனியாக தோன்றி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விழாக்களிலும் அவர்கள் இருவரை மட்டும்தான் பார்க்க முடிகிறது.

ஏன் அம்பானி வீட்டு திருமணத்தில் கூட ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா தனியாகவும் அமிதாப், அபிஷேக் , ஜெயா பச்சன் தனியாகவும் வந்தனர். இவர்கள் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்றும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் ஒரு பார்ட்டியில் எங்களின் நிச்சயதார்த்த மோதிரம்தான் இது. இன்னும் நாங்கள் சேர்ந்துதான் வாழ்கிறோம் என அபிஷேக் தன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை காட்டினார்.

aishwarya 1
aishwarya 1

இதையும் படிங்க: Biggboss Tamil: மாஸ் காட்டுறேனு மக்கா இருக்காதீங்க… தர்ஷிகாவை பொளக்கும் ரசிகர்கள்…

இப்போதும் ஒரு தகவலை அபிஷேக் பச்சன் கூறியிருக்கிறார். அதாவது பிள்ளைகள் அவர்கள் தாயுடன் செலவிடும் நேரத்தை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. எங்களது மகள் ஆராத்யாவை ஐஸ்வர்யா ராய் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில்தான் நான் வெளியில் சென்று படங்களில் நடிக்க முடிகிறது. எனவே நான் ஐஸ்வர்யா ராய்க்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இது ஒரு வித நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதாவது மகளுக்காகவும் கணவருக்காகவும்தான் ஐஸ்வர்யா ராய் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என அபிஷேக் சொன்ன இந்த தகவல் மூலம் நமக்கு தெரியவருகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.