பில்லா படத்தில் அஜித் நடிக்க யார் காரணம் தெரியுமா? அடடா! சூப்பரா இருக்கே!

billa
அஜித் நடிப்பில் வெளியான பில்லா ரீமேக்கில் அவரை நடிக்க வேண்டும் என கறாராக கூறியது யார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் பில்லா. இப்படத்தில் கே.பாலாஜி, ஸ்ரீபிரியா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. வசூலில் கூட அப்போதைய காலத்தில் மிகப்பெரிய சாதனையை பெற்றது.
billa rajini
இப்படத்தினை 27 வருடம் கழித்து ரீமேக் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது. விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்த இப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என தீவிர ஆலோசனை நடந்ததாம். அப்போது ரஜினிகாந்த் பில்லா வேடத்திற்கு இப்போது அஜித் தான் சரியாக இருப்பார் எனக் கூறினாராம். அதுமட்டுமல்லாமல் அஜித்தை தொடர்பு கொண்டும் நீ இப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனவும் கூறினாராம்.

rajinikanth ajith
இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. மிகப்பெரிய உச்சத்தில் இருந்த விஜயிடம் அஜித் தோல்வியை தழுவி இருந்தார். கேரியரே முடிந்துவிடும் தருவாயில் தான் இருந்தது. ரஜினி பில்லா நடிக்கும் சமயத்தில் அவருக்கும் இதே நிலை தான் இருந்தது. அதை தொடர்ந்து பில்லா தான் அவர் வாழ்க்கையை மாற்றியது. அதனால் அதே நிலைமையில் இருக்கும் அஜித்திர்கு இந்த படத்தின் வாய்ப்பை ரஜினி ஏற்படுத்தி கொடுத்தாராம். உடனே ஓகே சொல்லி அஜித் நடித்து முடிக்க படமும் டாப் ஹிட் கொடுத்தது. அப்படத்தில் அஜித் பேசிய ஐ அம் பேக் வசனம் பலரிடம் பெரிய அப்ளாஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.