இதுவரை ஏன் ஷங்கர் அஜித்தை வைத்து படம் இயக்கவில்லை தெரியுமா.?! பகீர் கிளப்பும் பின்னணி இதுதான்.!

Published on: March 2, 2022
---Advertisement---

சில கூட்டணிகள் திரும்பவும் தமிழ் சினிமாவில் நடக்காதா என்று ரசிகர்கள் ஏங்குவார்கள். சில கூட்டணிகள் ஒரு தடவையாவது நடக்காதா என ஏங்குவார்கள். அதில் ஒன்று தான் அஜித்குமார் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மனதிலும் கண்டிப்பாக எழுந்திருக்கும்.

ஆனால், சிலர்க்கு தெரிந்திருக்கும் அஜித் – ஷங்கர் கூட்டணி உறுதியாகி, 2,3 நாட்கள் ஷூட்டிங் வரை சென்றது என்று. ஆம், ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். அதற்கான கதை ஓகே செய்து, இரண்டு நாள் ஷூட்டிங் வரை சென்றுவிட்டது.

ஆனால், அதன் பின்னர் பல காரணங்களால், அஜித் விலகி, பிரசாந்த் உள்ளே வந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அஜித் வெளியேறியதற்கான காரணம் பல கூறப்பட்டாலும், அனைவருக்கும் தெரிந்த கரணம் தான் உண்மை என கூறப்படுகிறது

இதையும் படியுங்களேன் – எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.! என்னதான் நடந்தது.?!

அதாவது, அஜித் பொதுவாக தனது படங்களின் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விரும்பமாட்டார். அது முன்னடி இருந்தே இதுதான் உண்மை. ஆனால்,ஷங்கர் தனது படத்தின் விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ஏனென்றால், அது படத்தின் பட்ஜெட் அதிகம் அதனால் அதனை மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்தால் தான் படம் தப்பிக்கும் என்பது அவரது நம்பிக்கை.

ஆனால், அஜித் அதற்கு அப்போதே உடன்படவில்லையாம். அதன் காரணமாகத்தான் தற்போது வரை அஜித் – ஷங்கர் கூட்டணி நிறைவேறாமலே போனது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment