டோட்டல் அப்செட்டில் தல!.. ‘துணிவு’ வெற்றிவிழாவை ரத்து செய்யச் சொன்ன அஜித்!..
துணிவு படத்தின் வெற்றியை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடினாலும் அஜித் ஏதோ ஒருவிதத்தில் அப்செட்டாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. காரணம் துணிவு பட ரிலீஸ் நேரத்தில் அவர் ரசிகர் ஒருவர் மரணமடைந்த செய்தி கேட்டுத்தானாம்.
இதுவரை அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு இரங்கல் செய்தியும் வராத நிலையில் துணிவு படத்தில்ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சுப்ரீம் சுந்தர் அஜித் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.அந்த ரசிகர் துணிவு பட ரிலீஸ் மகிழ்ச்சியில் ஆடி பாடி கொண்டாடியதில் லாரியில் இருந்துதவறி விழுந்து மரணமடைந்தார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரே இல்லாமல் எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கிய பிரபல இயக்குனர்… கேட்கவே ஆச்சரியமா இருக்கே!!
அதை கேட்டு அஜித் மிகவும் அப்செட்டாகி விட்டார். அதன் காரணமாக துணிவு பட வெற்றி விழாவை கொண்டாட வேண்டாம் என்று அஜித் சொல்லிவிட்டாராம். படக்குழு வெற்றிவிழாவை கொண்டாட திட்டமிட்டப் போதுஇந்த ஒரு சம்பவம் அஜித்தை பாதித்ததால் இந்த முடிவை எடுத்தார் என்று சுப்ரீம் சுந்தர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணையும் ஏகே-62 படத்தின் பூஜையையும் மிகவும்எளிமையாக நடத்த அறிவுரை கூறியிருக்கிறாராம். சொல்லப்போனால் மீடியா வெளிச்சமே படக்கூடாது என்றும் கூறியிருக்கிறாராம்.இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படக்குழு அதன் வெற்றியை கேக் வெட்டி குதூகலமாக கொண்டாடிய புகைப்படங்கள்வெளிவந்தன.