Connect with us
ajith

Cinema News

ரசிகன் செஞ்ச செயலால் ஆடிப்போன அஜித்! சென்னையில் படப்பிடிப்பை நிறுத்தியதற்கும் இதுதான் காரணமாம்

Actor Ajith:  நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் இந்த இடத்தை பிடிக்க அஜித் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இவரின் வளர்ச்சியை கூடவே இருந்து பார்த்த பல பேருக்கு தெரியும். அதை ஒரு சில பேர் பல பேட்டிகளில் சொல்ல கேட்டிருக்கிறோம்.

சாதாரண மெக்கானிக்காக இருந்தவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தெலுங்கு படத்தின் மூலம் இண்டஸ்டிரிக்குள் நுழைந்தார். எதிர்பாராத விதமாக தெலுங்கு பட இயக்குனர் ஒரு விபத்தில் சிக்க அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

   

இதையும் படிங்க: தேவர் மகன் கிளைமேக்ஸ் காட்சியை மீண்டும் எடுக்க சொன்ன கமல்!.. அந்த சின்ன வசனம்தான் ஹைலைட்!..

அதன் பிறகுதான் அமராவதி படம் அவரை அணைத்துக் கொண்டது. முதல் படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும் விடாமல் முயற்சி செய்து பல நல்ல நல்ல படங்களில்  நடித்தார்.

மேலும் சில படங்களில் கமிட் ஆகி அதன் பிறகு அந்தப் படங்களில் நடிக்ககூடிய வாய்ப்பை இழந்திருக்கிறார் அஜித். காரணம் பைக் ரேஸின் போது ஏற்படும் விபத்துக்களால் சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.

இதையும் படிங்க: தளபதியோட உத்தரவு! தீயாய் வேலை செய்யனும் குமாரு – ‘லியோ’ வெற்றிவிழா இப்படித்தான் நடக்கப் போகுது

அதன் காரணமாகவே வந்த வாய்ப்புகள் எல்லாம் அவரை விட்டு பறிபோனது. இருந்தாலும் குறிப்பிட்ட சில நாள்கள் ஓய்வெடுத்து மனம் தளராது அந்த வலியோடு படங்களில் நடித்திருக்கிறார் அஜித். இதன் காரணமாகவே அவரின் உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த பரிசுதான் இவ்ளோ கோடி ரசிகர்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றத்தை கலைத்து உங்கள் குடும்பத்தை பாருங்கள், அவர்களுக்காக இருங்கள் என்று சொல்லி ரசிகர் மன்றத்தையே கலைத்தார். அஜித் படத்தின் படப்பிடிப்பும் முன்பு சென்னையில்தான் நடந்தது. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் முக்கால் வாசி வெளி நாடுகளில்தான் நடக்கிறது.

இதையும் படிங்க: வாரே வா!.. வசூலில் இங்க நான் தான் ராஜா என நிரூபித்த விஜய்!.. லியோ 12 நாளில் இத்தனை கோடி வசூலா?..

அதற்கு காரணமும் ஒரு ரசிகர் செய்த வேலைதான் என்று சொல்லப்படுகிறது. ஒரு பிரபலமான ஸ்டூடியோவில் அஜித் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அப்போது அஜித்தை பார்க்க ஒரு ரசிகர் அந்த ஸ்டூடியோவின் காம்பவுண்ட் சுவரின் மேல் நின்று அஜித்தை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் என் கழுத்தை அறுத்து இறந்து விடுவேன் என கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தாராம்.

அதை நேரடியாகவே பார்த்த அஜித்துக்கு பயங்கர ஷாகி ஆகிவிட்டதாம். அதிலிருந்தே இனிமேல் இங்கு படப்பிடிப்பு வைக்கக் கூடாது என அஜித் முடிவெடுத்திருக்கலாம் என ஒரு ஸ்டண்ட் க்ரூப்பில் இருக்கும் ஒருவர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top