Categories: Cinema History Cinema News latest news

ஒவ்வொரு பேட்டியிலும் சர்ச்சையை கிளப்பிய அஜித்… வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம மாட்டிக்கொண்ட பெரிய பிரச்னை என்ன தெரியுமா?

அஜித் ரொம்ப சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது ஸ்டாராக இருக்கிறார். இப்படி கஷ்டப்பட்டு வந்தவர். பொது மேடைகளில் ஏன் பேசுவதை தவிர்த்து வருகிறார் தெரியுமா?

அஜித்துக்கு ஆரம்ப காலக்கட்டத்தில் அதிக அளவில் தலைக்கணம் இருக்குமாம். விஜயை தன்னுடைய லெவலே இல்லை என்றே நினைத்து நிறைய பேட்டிகளை கொடுத்து இருக்கிறார். படம் வெற்றி பெற்றால் மட்டும் இயக்குனர் காரணமாக சொல்கிறார்கள். ஃப்ளாப்பானால் ஏன் என்னை சொல்கிறீர்கள். அதுக்கும் அவர் தான் காரணம் என அஜித் பேசியதெல்லாம் அவருக்கு திமிர் அதிகம் என கோலிவுட்டே பேசியது.

Ajithkumar

அதை தொடர்ந்து தனக்கும் ஹீராவுக்குமான காதல் குறித்து அவர் பகிரங்கமாக கூறியதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. படப்பிடிப்புகளில் இருக்கும் போதே ரேஸுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். ஒருமுறை வில்லன் படப்பிடிப்பு சமயத்தில் இப்படி அவர் செய்ய பிரபல தயாரிப்பாளரான கே.ஆர் நடிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் எனப் பேட்டி கொடுத்தார்.

இதையும் படிங்க: அட கேளுங்க!.. நயனின் திரைப்படத்திற்கு இந்த சிறப்பு உண்டா?.. இதுலயும் அம்மணி தான் டாப்!..

அதற்கு பதிலளிக்கும் விதமாக கண்ட நாயெல்லாம் என்னை பத்தி பேசக்கூடாது என அஜித் பதிலளித்தார். இது மிகப்பெரிய பிரச்னை ஆனது. தொடர்ந்து அவர் ஒவ்வொரு பேட்டிகளிலும் தான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் எனக் கூறிவிடுவார். ஆஞ்சநேயா படத்தின் ப்ரஸ்மீட் சமயத்தில் கூட இந்த படத்துக்கு பின்னர் நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டாராக இருப்பேன் எனக் கூறினார்.

இப்படி ஒவ்வொரு பேட்டியிலும் பிரச்னையை இழுத்து கொண்டு வரும் அஜித் மிகப்பெரிய பிரச்னையை இழுத்தது ஒரு நிகழ்வில் தான். கருணாநிதிக்காக சினிமா பிரபலங்கள் சார்பில் நடத்தப்பட்ட பாச தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் கலந்து கொண்டு பேசினார்.

Ajithkumar

அப்போது, எங்களுக்கும் ப்ரைவசி இருக்கு. இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என மிரட்டுகின்றனர் எனப் பேசினார். இதை கேட்ட ரஜினிகாந்த் எழுந்து கை தட்ட பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதனால் அடுத்த நாளே மன்னிப்பு கேட்க வேண்டும் என அஜித்தை கட்சியில் இருந்து வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் கருணாநிதியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதை தொடர்ந்தே தான் பேசினாலே பிரச்னை வருகிறது. இனி பேசவே மாட்டேன் என முடிவு செய்தாராம் அஜித். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை அறவே தவிர்த்ததாக கூறப்படுகிறது.

Published by
Akhilan