ஆனந்தம் படம் காலங்கள் கடந்தும் ஏன் கொண்டாடப்படுகிறது? சுவாரஸ்ய ரீகேப்
தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்று என்றால் அதில் ஆனந்தம் படத்திற்கும் இடம் உண்டு. மம்முட்டி, முரளி, தேவயானி, ரம்பா, ஸ்ரீவித்யா, அப்பாஸ் ஆகியோர் நடிப்பில் படம் செம வசூல் வெற்றியை பெற்றது. இதற்கு முக்கிய காரணங்களாக சில சீக்ரெட் விஷயங்களும் இருந்தது. நீங்களும் கவனித்தீர்களா?
எதார்த்தமான காட்சிகள்:
ஆனந்தம் படமும் தமிழ் சினிமாவின் பழைய அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் கதையை கொண்டது தான். ஆனால் இதில் ஓவராக பாசம் பெருக்கெடுத்து இருக்காது. நடைமுறை வாழ்க்கையை போல அண்ணனிடம் சண்டை போட்டு பின்னர் தவறை உணரும் முரளி காட்சி தான் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். சாதாரண வீட்டினரை பக்கத்தில் இருந்து பார்க்கும் பீலையே ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும்.
லிங்குசாமியின் இயக்கம்:
ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு லிங்குசாமி அதிகமாக தனது உழைப்பை போட்டாராம். அத்தனை ரீடேக்குகளை நடிகர்களுக்கு கொடுத்தாராம். அதிலும், மம்முட்டி டப்பிங் பேசும் போது ஒன்ஸ் மோர் சொல்லிக்கொண்டே இருந்தாராம்.
ஒரு கட்டத்தில் கடுப்பான மம்முட்டி, லிங்குசாமி வெளியில் போனால் தான் பேசுவேன் என சொல்லும் அளவுக்கு தொல்லை கொடுத்தாராம். ஆனால் படம் ரிலீஸாகி ஒரு வார இதழ் தமிழில் டப்பிங் பேசுவதை மற்ற நடிகர்கள் மம்முட்டியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டி இருந்தது. அம்புட்டு டார்ச்சருல!
குறைவான டயலாக்குகள்:
படத்தின் மொத்த நேரமான 2.30ல் வெறும் 1.30 மணி நேரம் தான் டயலாக்குகளே இருக்கும். அதுவும் வழவழ என்று நீளமாக இல்லாமல் ஷார்ட்டாக முடித்திருப்பார்கள். அதிலும், ஆளாளுக்கு பீரோல கை வைக்காதீங்க என மம்முட்டி சொல்லிய 1 நிமிடம் கழித்து தான் அடுத்த டயலாக்கே வரும்.
நோ மாஸ் வில்லன்கள்:
தமிழ் சினிமாவின் அக்மார்க் ட்ரெண்ட் என்றால் நாயகனை அழித்தே தீர வேண்டும் என்பதற்காக ஒரு வில்லன் தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து இருப்பார். ஆனால், ஆனந்தம் படத்தில் அப்படி அழுத்தமான வில்லன்களே இருக்கமாட்டார்கள். பெரிய சண்டை கூடாது இருக்காது. இதெல்லாம் தான் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.