அண்ணாத்த படம் ஃப்ளாப் ஆனதற்கு காரணம் ரஜினி மகள்கள் தானாம்... காண்டான சிவா... கசிந்த தகவல்

by Akhilan |
அண்ணாத்த படம் ஃப்ளாப் ஆனதற்கு காரணம் ரஜினி மகள்கள் தானாம்... காண்டான சிவா... கசிந்த தகவல்
X

ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் ப்ளாப் ஆனதற்கு அவரின் மகள்கள் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அண்ணாத்த திரைப்படம் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம். இப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி முதன் முதலாக நடித்த இப்படம் கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக படப்பிடிப்பு ஒன்றரை ஆண்டுகளாக நீடித்தது. இந்தியாவில் லாக்டவுன் மற்றும் 2020 டிசம்பர் பிற்பகுதியில் ரஜினிகாந்தின் உடல்நலப் பிரச்சினைகள், படத்தின் தயாரிப்பை தாமதப்படுத்தியது. இத்திரைப்படம் முதன்மையாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க: என் முதல் பட சம்பளம் இவ்வளவு தான்… அதில் என் கைக்கு இவ்வளவு தான் வந்தது…. லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் தகவல்

அண்ணாத்த தீபாவளியை முன்னிட்டு 4 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய ஃப்ளாப் படமாக இது அமைந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் இது என்ன ரஜினிகாந்துக்கு சீரியலுக்கு வந்துட்டாருங்குற ரீதியில் கலாய்ப்புகள் இருந்தன.

ஆனால் இந்த படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது அவரது மகளான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தானாம். படப்பிடிப்பின் இடையிலேயே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதை தொடர்ந்து படப்பிடிப்புக்கு அவர் வரும் போது இவர்களும் அவர் கூடவே வருவார்களாம்.

படத்தின் காட்சிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் கூட இதை செய்யாதீங்க. அதை செய்யலாம் என அவர்கள் தான் படத்தினை இயக்கி இருக்கிறார்கள். இது தான் படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சவுக்கு சங்கர் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Next Story