அட்லீயை தவிர்க்கத்தான் இப்படி பண்ணாங்க! தளபதி 68ல் வெங்கட் பிரபுவின் என்ரி எப்படி தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்களை எப்போதும் கூஸ் பம்பில் வைத்திருக்கிறார் விஜய். ஏற்கெனவே லோகேஷின் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக விஜயின் தளபதி 68 படத்திற்கான அப்டேட்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கவும் போகிறார். இந்த நிலையில் முதலில் இந்தப் படத்தை அட்லீதான் இயக்க போகிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபட்டுக் கொண்டிருந்தது. திடீரென வெங்கட் பிரபு என்று சொன்னதும் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஆனால் இது ஒருவருடத்திற்கு முன்பாகவே அமைக்கப்பட்ட கூட்டணியாம். ஒரு வருடத்திற்கு முன்பே விஜயிடம் வெங்கட் பிரபு கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் அட்லீ, விஜய் கூட்டணியில் வெளிவந்த பிகில் திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருளாதார அளவில் பெரும் செலவை ஏற்படுத்திவிட்டாராம்.
அதை தவிர்ப்பதற்காகவே தளபதி 68 படத்தை வெங்கட் பிரபுவை வைத்து எடுப்பதாக ஏஜிஎஸ் நிறுவனம் முடிவெடுத்ததாம். அட்லீ பொதுவாகவே ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் என்று சொல்லி தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்துவார் என்பதற்காகவே அவரை இந்தப் படத்தில் இருந்து விலக்கி விட்டதாக பிரபல பத்திரிக்கையாளரான சங்கர் கூறினார்.
இதையும் படிங்க : அஜித்தை பத்தி தெரியாம பேசுறாங்க – இத நிறுத்துனா நல்லது! பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி