ரெண்டு பக்கமும் குத்துனா எப்படி தாங்குறது… #Boycottjawan ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்!

by Akhilan |
ரெண்டு பக்கமும் குத்துனா எப்படி தாங்குறது… #Boycottjawan ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்!
X

Boycott Jawan: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்துக்கு ட்விட்டர் தளத்தில் எதிர்ப்புகள் துவங்கிவிட்டது. இதன் பின்னர் இரண்டு முக்கிய காரணம் இருக்கிறதாம். அதுகுறித்து பல தகவல்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஷாருக்கானின் மாஸ் ஹிட் படமான பதானை தொடர்ந்து வெளிவர இருக்கும் திரைப்படம் ஜவான். இப்படத்தினை அட்லீ இயக்கி இருக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி, ஜோடியாக நயன்தாரா, காமெடிக்கு யோகி பாபு என ஒரே தமிழ் பட்டாளங்களே அதிகமாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 21 வருஷம் கழிச்சு விட்டத மீண்டும் கையிலெடுக்கும் டி.ஆர்! என்ன காரணம்னு தெரியுமா? இனிமே டப்பு டுப்பு டப்புதான்

அனிருத் ஒரு பாட்டு இசையமைக்கணும் என அட்லீ கேட்க அதுக்கென்ன எல்லா பாட்டையும் பண்ண சொல்லி ஷாருக் ஒப்புதல் கொடுத்தாராம். அதனால் இந்தி சாயல் அதிகம் அடிக்காமல் ஒரு தமிழ் படம் போல இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்புகள் தற்போது உருவாகி இருக்கிறது.

கிட்டதட்ட படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் தான் இருக்கும் நிலையில் பட ப்ரோமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த ஆடியோ ரிலீசுக்கே வராத நயன் திருப்பதியில் ஷாருக்கானுடன் படம் வெற்றிபெற வேண்டும் என வழிபாட்டுக்கு வந்தார்.

இதையும் படிங்க: பீஸ்ட் படம் சொதப்ப நெல்சன் காரணமே இல்லையாம்… விஜயை கவுக்க இப்படியா சதி பண்ணுவீங்க…

இன்னொரு பக்கம் உதயநிதியின் சனாதன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் நிறுவனமான ரெட் ஜெயண்ட் வெளியிடும் ஜவானை புறக்கணியுங்கள் என ஒரு கூட்டம் கோஷமிட்டு வருகின்றனர். இதேபோல் பதானுக்கும் சர்ச்சை எழுந்தாலும் படம் கோடி கோடியாக கொட்டியதாம். ரைட்டு!

Next Story