More
Categories: Cinema News latest news

கமல் கைவிட்ட படத்தில் சிம்புவா? என்னடா இங்க நடக்குது?!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் நடிக்கிற படத்தைக் கமல் தான் தயாரிப்பதாக இருந்தது. இப்போ அந்தப் படம் ட்ராப் ஆகிடுச்சா? அந்தப் படத்தை எஸ்டிஆரே ப்ரீபுரொடக்ஷனுக்கு எல்லாம் அமௌண்ட் போட்டதாக சொல்றாங்க. அதுபற்றிய தகவலைப் பிரபல சினிமா பத்திரிகையாளர் அஸ்வின் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

தேசிங்கு பெரியசாமி இதுபற்றி பேசும்போது சிம்பு தான் பிரி புரொடக்ஷனுக்கு செலவழிக்கிறார். அவங்க இந்தப் படம் பெரிய புரொடக்ஷன்ல வந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறாங்க. ஆனா இது ட்ராப் ஆகல.

Advertising
Advertising

அவங்க நினைக்கிற மாதிரி பெரிய தயாரிப்பு நிறுவனம் கிடைச்சா படத்தைத் கூடிய விரைவில் தொடங்குவாங்க… என்றார் அஸ்வின்.

அப்போது சித்ரா லட்சுமணன் என்னைப் பொருத்தவரைக்கும் சிம்புவே இந்தப் படத்தைத் தொடரலாம்னு தான் தெரியுது. ராஜ்கமல் ஏன் ட்ராப் பண்ணினாங்கன்னா ஓடிடியின் விலை சரிவு தான்.

#image_title

இதற்கு முன்னாடி கொடுத்த விலையில் ஓடிடி 45 பர்சன்ட் கட் பண்ணி 55 அல்லது 60 பர்சன்ட் தான் கொடுக்குறாங்க. சிம்புவைப் பொருத்தவரைக்கும் இந்தப் படத்தை எடுத்தா 100 பர்சன்ட்ல அவரோட சம்பளம் 40 பர்சன்ட்.

அவரு படத்தை எடுத்தா படத்தோட பட்ஜெட் 60 பர்சன்ட்ல முடிச்சிடலாம். இந்தப் படத்தைப் பொருத்தவரை நிச்சயமாக 60 பர்சன்ட்டுக்கு மேல தான் வியாபாரம் ஆகும். ஏன்னா அந்தக் கதை அப்படி.

அந்தப் படத்தோட கதை பிடிச்சிருந்ததால தான் கமலே தயாரிக்க முன்வந்தாரு. தாணுவும் அந்தப் படத்தின் கதையைக் கேட்டு நிச்சயமா வெற்றிபெறும்னு தான் சொன்னாரு.

Also read: ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு கதையே இல்லை! விட்டுக் கொடுத்த பிரபலம்

இதை சிம்பு எடுத்தாருன்னா அவரோட கேரியரை இன்னும் நல்லா ஸ்டெடி பண்ணிக்கலாம்னு தான் நான் நினைக்கிறேன் என்கிறார். ஆபாவணனின் ஊமை விழிகள் படம் கூட ரிலீஸ் ஆக முடியாம தள்ளி தள்ளிப் போனது. அப்புறம் அந்தப் படம் வந்த பிறகு எவ்வளவு பெரிய ஹிட்டாச்சங்கறது எல்லாருக்குமே தெரியும் என்றும் அவர் சொன்னார்.

 

 

Published by
sankaran v