குஷ்புவுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்... இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
80களில் தமிழ்த்திரை உலகில் புதுவரவாக வந்து ரசிகர்களை தன் நடிப்பால் கொள்ளை கொண்டவர் நடிகை குஷ்பு. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 1988ல் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமானார்.
அரசியல்வாதி, தயாரிப்பாளர், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். வருஷம் 16, வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி என பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து குஷ்புவுக்கு தமிழ்த்திரை உலகில் மார்கெட் எகிறியது. பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. இவரது வசீகரப் புன்னகையில் மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். தன் அழகாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையானார்.
90களில் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். குஷ்புவைக் கொண்டாடிய அளவுக்கு தமிழ்சினிமா ரசிகர்கள் வேறு எந்த நடிகையையும் கொண்டாடவில்லை என்றே சொல்லலாம். இவ்வளவு ஏன் இட்லிக்குக் கூட குஷ்பு இட்லி என்று பெயர் வைத்தனர். அவருக்கு ஒரு ரசிகர் கோவிலே கட்டி விட்டார்.
தமிழ்த்திரையுலகின் கனவுக்கன்னியாக ஜொலித்த குஷ்புவும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கினார். இளையதிலகம் பிரபுவுக்கும், குஷ்புவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.
சின்னத்தம்பி படத்தில் நடிக்கும்போது இருவருக்குள்ளும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானது. அப்போது இருவரும் டேட்டிங் செய்ததாக செய்திகள் வெளியானது. அப்போது பிரபுவின் அப்பா சிவாஜியின் தலையீட்டால் இந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரபுவும், குஷ்புவும் திருமணம் செய்து கொண்டதாக டாக்டர் காந்தாராஜ் தெரிவித்தார். அவர் யூடியூப் பிரபலம். சினிமா மற்றும் வரலாறு தொடர்பாக அவ்வப்போது பேட்டி கொடுப்பார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் குஷ்புவுக்குக் கோவில் கட்டும் அளவுக்கு எங்கள் ரசிகர்கள் வெறித்தனமாக இருந்தனர். அந்த நேரத்தில் பிரபு, குஷ்பு காதல் விவகாரம் தலைப்புச் செய்தியாக வந்தது.
அப்போது முத்தக்காட்சிகளில் குஷ்பு புகுந்து விளையாடினார். கொண்டையில் தாழம்பு கூடையில் என்ன பூ குஷ்பு என்று ரஜினியே பாடும் அளவுக்கு குஷ்பு ரொம்பவே பிரபலமாக இருந்தார். குஷ்புவும், பிரபுவும் காதல் என்று கூட சொல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அப்போது பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தன. குஷ்பு, பிரபு ஜோடியாக நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. அப்போது இவர்களது திருமணத்திற்கும் பிரபுவின் முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
அவர்களது குடும்பத்தின் விஷயம் பற்றிப் பேசக்கூடாது. அன்று இந்திப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். முத்தக்காட்சிகளில் தைரியமாக நடித்த நடிகை குஷ்புதான். அப்போது ஒரு இந்தி பத்திரிகையில் கிஸ்ஸபிள் குஷ்புன்னே டைட்டில் போட்டாங்க. அப்போது ரசிகர்கள் நம் எண்ணங்களை எல்லாம் அவங்க தான் நிறைவேற்றுறாங்க.
ஆண் ரசிகர்கள் எல்லாரும் குஷ்பு குஷ்புன்னு உயிரை விட்டாங்க. அதுதான் ரசிகர்களைக் கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமாக மாற்றியது. கோயில் கட்னாங்களா இல்லையா, அது எங்கே இருக்குன்னு தெரியாது. பத்திரிகைகளில் வந்த தகவல் தான். அதே சமயத்தில் அவர் வருஷம் 16 போன்ற படங்களில் எல்லாம் பிரமாதமாக நடித்திருந்தார். ரொம்ப நல்ல நடிகை’ என அவர் கூறினார்.