Connect with us
Kamal movies

Cinema History

கமல் ஒரே நேரத்தில் இவ்ளோ படங்களை அறிவிச்சதன் பின்னணி இதுதானாம்… இப்படி கூட யோசிப்பாங்களா…?

கமல் படங்கள் என்றாலே எந்தக் காலத்திலும் தனி மவுசு தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூலை கோடிகளில் வாரி இறைத்தது.

கொரானா காலத்தால் நைந்து போன தமிழ்த்திரை உலகுக்கு ஒத்தடம் போட்டது போல இருந்தது. புது ரத்தம் பாய்ச்சியது. அந்த குஷியில் சூட்டோடு சூட்டாக பல படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார் கமல். ஆனால் எந்தப் படம் தான் முதலில் வரும் என்று தெரியவில்லை. இதுபற்றிய விளக்கத்தை வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமலுக்கு கல்கி, இந்தியன்2, 3, எச்.வினோத் படம், தக் லைஃப்னு வரிசை கட்டிப் படங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதற்குக் காரணம் விக்ரம் தான். இந்தப் படத்தோட பிளாக்பஸ்டர் வெற்றி தான் அவருக்கு படங்களை கியூவில் நிற்க வைத்து விட்டன.

Vikram

Vikram

அதனால தான் கமல் நாம அறுவடை பண்ண வேண்டிய நேரத்திலேயே அறுவடை பண்ணனும்கற முடிவுக்கு வந்துவிட்டாராம். அதனால் தான் அடுக்கடுக்கான படங்கள் அறிவிக்கப்படுகிறதாம்.

சூட்டிங் போறது, பிக் பாஸ்னு கமல் படு பிசியாக இருக்கிறார். இதுக்கு நடுவில் அரசியலுக்கு வேறு நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதான் ஒரே காரணம். அதாவது அவர் சினிமாவில் தான் நிறைய சம்பாதிக்கிறார். திரும்பவும் சினிமாவில் தான் முதலீடு செய்கிறார்.

அதனால் அவர் இழந்த இழப்புகளும் ஏராளம். அதனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திரும்பவும் சினிமாவிலேயே சம்பாதிக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணுகிறார் போலும். இழந்த இடத்தில் தானே மீட்க முடியும் என்பதால் அந்த வேலையில இருக்கிறாராம் கமல்.

கமலைப்பொருத்த வரை இந்தியன் 2, 3, எச்.வினோத் படம், தக் லைஃப்னு வரிசையாக ஒவ்வொன்றாக முடித்து இருக்கலாம். திடீர்னு பிரபாஸ் படத்துல 150 கோடி தர்றாங்கன்னதும் போனார். அதுல தப்பு இல்ல. மற்ற ஹீரோக்களுக்குன்னா எப்ப எந்த படத்தை எடுக்கறது? எந்தப் படத்தை முடிக்கிறதுன்னு ஆயிடும்.

ஆனா கமலுக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. கமல் சூட்டிங் ஸ்பாட்டுக்கு காலைல 6 மணிக்கு வரச்சொன்னால் மேக்அப்போடு தயாராக வந்து விடுவாராம். அதனால ஒரே நேரத்துல நாலைஞ்சு படங்கள்ல நடிக்கிறது கமலுக்கு சாத்தியம்தான்.

மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top