மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை

by sankaran v |   ( Updated:2024-02-05 05:33:03  )
MVD
X

MVD

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.

சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எங்கு வைப்பது என்று சிக்கல் வந்ததாம். அதன்பிறகு தான் டைட்டிலில் வைத்தார்களாம்.

தமிழ்சினிமாவில் மலேசியா வாசுதேவனின் குரல் மாறுபட்டது. குரலில் பாவங்களைக் கொண்டுவதில் ஆற்றல் மிக்கவர் தான் அவர். முதல் மரியாதை படத்தில் அவரது பூங்காற்று திரும்புமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரே வரியில் உங்களைப் பாட்டோடு கலக்கச் செய்து விடுவார் அந்தப் பாடகர். அவர் ஒரு பாடலைப் பாடி விட்டார் என்றால் அது சக்சஸ் தான்.

Oru Kaithiyin Diay

Oru Kaithiyin Diay

பாரதவிலாஸ் படத்தில் தான் மலேசியா வாசுதேவன் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு வரவே இல்லையாம். இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல் சம்பந்தமாக ஒரு இசை ஆல்பம் பண்ணினாராம். அதில் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். 16 வயதினிலே படத்தில் இருந்து தான் அவர் ஹிட் ஆனார். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற அந்தப் பாடல் உண்மையிலேயே சூப்பர்ஹிட். பட்டிக்காட்டுல எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிப் பயலின் உணர்ச்சிகளை குரலிலேயே கொடுத்து விடுகிறார் மலேசியா வாசுதேவன்.

எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் சம கால நண்பர்கள். கல்யாணராமன் படத்திலும் அப்பாவி, அறிவாளிக்குமான சிறுவித்தியாசத்தை மலேசியா வாசுதேவன் குரலில் கொண்டு வந்து அசத்தியிருப்பார். அதுதான் காதல் வந்திரிச்சி...பாடல். எதுக்கு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக்கூடிய குரல் அம்சம் கொண்டவர் தான் மலேசியா வாசுதேவன்.

சினிமாவிலும் வில்லத்தனத்தில் வெளுத்துக்கட்டினார். ஒரு கைதியின் டைரி படத்தில் இவரது வில்லத்தனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார். அந்த நக்கல், நய்யாண்டி, குறும்புத்தனம் எல்லாம் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கும்.

நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார். இதில் தான் அவர் ஒரு இடத்துக்கு மேல் அவரால் பண்ண முடியவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் படங்கள் இல்லாமல் இருந்தார். அதனால் தான் அவர் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story