தளபதிக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையாத மணிரத்னம... அவரே சொன்ன காரணம்..!

by sankaran v |   ( Updated:2024-08-21 10:48:07  )
mrir
X

mrir

இளையராஜாவும், மணிரத்னமும் தமிழ்சினிமா உலகின் மிகப்பெரிய ஆளுமைகள். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் எல்லாமே வேற லெவலில் இருக்கும். அதற்கு ஒரு உதாரணம் தளபதி படம் தான். அத்தனைப் பாடல்களும் சூப்பர்ஹிட்.

அதே போல அக்னி நட்சத்திரம் படத்தில் 'ராஜா ராஜாதி ராஜனில்லை கூஜா' பாடல். இந்தப் பாடலில் 'கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவும் நான் ராஜா' என்ற வரிகள் இளையராஜாவுக்கே எழுதியது போல கச்சிதமாகப் பொருந்தி இருக்கும்.

இளையராஜாவும், மணிரத்னமும் ஒன்றாக இணைந்து 10 படங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால் அதன்பிறகு இருவரும் ஏன் படங்களில் இணையவில்லை. இந்தக் கேள்வி பலருக்கும் மனதில் எழுந்திருக்கும். அதுக்கு என்ன காரணம்னு பார்ப்போமா...

தன்னோட முதல் படத்துல இளையராஜா தான் மியூசிக் பண்ணனும்னு மணிரத்னம் சொன்னாராம். அதனால இயக்குனர் பாலுமகேந்திரா தான் இளையராஜாவை மணிரத்னம் படத்துக்கு இசை அமைக்கச் செய்தாராம். அந்த நேரத்துல இளையராஜா வாங்கின சம்பளம் மணிரத்னமால கொடுக்க முடியாத அளவுக்கு இருந்ததாம். அதனால மணிரத்னம் படத்துக்காக இளையராஜா தான் வாங்கின சம்பளத்துல அஞ்சுல ஒரு பங்காகக் குறைத்துக் கொண்டாராம்.

ஆனா அது தமிழ்ல அல்ல. கன்னடத்துல தான் நடந்தது. பல்லவி அனுபல்லவி தான் அந்தப் படம். அதுல முதல்ல கமல் தான் நடிக்கிறதா இருந்துச்சாம். அப்போ அவர் ராஜபார்வை படத்துல பிசியா இருந்ததால அனில்கபூர் நடித்தாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் வந்த நாயகன் தான் இளையராஜாவுக்கு 400வது படம். அவரது இயக்கத்தில் வந்த அஞ்சலி படம் தான் 500வது படம். மணிரத்னம் இயக்கத்தில் நாயகன், தளபதி, அஞ்சலி, மௌனராகம் படங்களில் இளையராஜா பிஜிஎம்மில் வெளுத்து வாங்கி இருப்பார்.

thalapathi

thalapathi

இதயக்கோவில் படத்தில் வரும் நான் பாடும் மௌனராகம் என்ற பாடல் ரொம்பவே பிரபலமானது. அந்தப் பாடலில் இருந்த ஒரு வார்த்தையை எடுத்துத் தான் தன்னோட அடுத்த படத்துக்கு டைட்டிலாக வைத்தாராம் மணிரத்னம். அது தான் மௌனராகம் படம்.

தளபதி படத்தில் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலை முதலில் மணிரத்னம் கேட்கும்போது இது காதல் பாடல் மாதிரி இல்லன்னு நிராகரித்தாராம். அதன்பிறகு இளையராஜா அவரிடம் விளக்கி சொன்னதும் தான் சம்மதித்தாராம். ஆனால் அந்தப் படத்தில் சூப்பர் மெலடி சாங் அதுதான்.

தளபதி படத்துக்கு அப்புறம் இளையராஜாவும், மணிரத்னமும் இணையவில்லை. ஏன்னு பலருக்கும் எழுந்த இந்தக் கேள்வியை ரசிகர் ஒருவர் ஒருமுறை மணிரத்னத்திடம் கேட்டாராம். அதற்கு அவர் 'நீங்க என்ன காஸிப் ரைட்டரா...?'ன்னு சிரிச்சிக்கிட்டே கடந்து போய்ட்டாராம். அதே நேரம் இருவரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லையாம்.

Next Story