சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைகளுக்குக் கூட தெரியும். அந்த அளவு அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். வெறும் ஸ்டைலில் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் இவர் புலி தான். முள்ளும் மலரும், மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களுக்காக ரஜினிகாந்த் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றார். 1984ல் கலைமாமணி விருதையும், 1989ல் எம்ஜிஆர் விருதையும் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, தளபதி, அண்ணாமலை, வள்ளி, பாட்ஷா, முத்து படங்களுக்காக ரஜினிகாந்த் 10 பிலிம்பேர் விருதுகளையும், 7 முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். 2000த்தில் பத்ம பூஷன் விருதையும், 2016ல் பத்மவிபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
2009ல் சத்யபாமா பல்கலைக்கழகம் ரஜினிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2015ல் ஜம்மு பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. இது தவிர அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்குப் பல பல்கலைக்கழகங்கள் தயாராக இருந்தன. ஆனால் ரஜினிகாந்த் தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒருமுறை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ரஜினிக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்தது. அதை ஏற்க ரஜினி மறுத்தாராம். எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்திடம், நீங்கள் ஏன் ரஜினிக்கு டாக்டர் பட்டத்தை வழங்கவில்லை என்று நிருபர் கேட்டார்களாம். ஆனால், நாங்கள் அவருக்கு வழங்கத் தயாராகத் தான் இருக்கிறோம். ஆனால், அவர் தான் அதை வாங்கத் தயாராக இல்லை. அதனால் தான் அவருக்கு எங்களால் டாக்டர் பட்டத்தை வழங்க முடியவில்லை என்றாராம்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசே அவருக்கு வழங்கியது. தாதா சாகேப் விருது தான் மிக உயரிய விருது. அதையே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…