ஏவிஎம் (AVM) நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்றாலே ரொம்பவே அருமையாக இருக்கும். கதை, திரைக்கதை, இசை, பாடல்கள்னு சகலமும் பட்டையைக் கிளப்பும். இந்த நிறுவனம் இப்போது ஏன் படம் தயாரிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.குமரன் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
நிறைய தயாரிப்பாளர் என்ன சொல்றாங்கன்னா இனிமே பாரம்பரிய புரொடக்ஷனை வச்சி எல்லாம் படம் பண்ண முடியாது. ஏதாவது கார்ப்பரேட் கம்பெனி வந்தா தான் சரியா இருக்கும். ஏன்னா அவங்க கேட்கக்கூடிய சம்பளம் அதிகமா இருக்கு.
படத்தோட புரொடக்ஷன் அதிகமா இருக்கு. மினிமம் பட்ஜெட்டே 200 கோடி, 300 கோடின்னு தேவைப்படுது. அதனால தான் நடிகர்கள் கிட்ட இருந்து மரியாதையும் வரலன்னு பெரிய பாரம்பரியமிக்க கம்பெனிகள் ஒதுங்கிட்டாங்க. இதை நீங்க எப்படிப் பார்க்குறீங்கன்னு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஏ.வி.எம். குமரன் சொன்னது இதுதான்.
என்னுடைய கருத்தும் அதான். இன்னிக்கு சினிமாவை ரொம்ப வளர்த்து விட்டுட்டாங்க. எல்லா படத்துக்கும் செலவு பண்ண வேண்டியிருக்கு. எல்லா படத்துக்கும் செலவு பண்ண வேண்டியது. 20 பேர் டான்ஸ் ஆடணும்னா 200 பேர் டான்ஸ் ஆடறாங்க.
இங்கே 20 பேர் கொடுக்குற மூவ்மெண்டை தான் 200 பேரும் ஆடிக்கிட்டு இருக்காங்க. சண்டைக்காட்சி எல்லாம் பிரம்மாண்டமா எடுக்கறதா நினைச்சு எல்லாம் கிராபிக்ஸ்லயே பண்ணிக்கிட்டு இருக்காங்க. சினிமாவோட வளர்ச்சி வந்து டெக்னாலஜியை இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கு. அதே நேரம் ஒரு பக்கம் கதை இல்லாமலேயே படம் எடுக்குறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெண், வாழ்க்கை, பராசக்தி, சகலகலாவல்லவன், முரட்டுக்காளை. எஜமான், மின்சாரக்கனவு ஆகிய புகழ்பெற்ற படங்களை தயாரித்தது ஏவிஎம். நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஏவிஎம் நிறுவனம் தனது 50வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்போது மின்சாரக் கனவு படத்தைத் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பிரபுதேவா, காஜல் அகர்வால், அரவிந்தசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாமே மாஸாக இருந்தது. படமும் பட்டையைக் கிளப்பியது. ராஜீவ் மேனன் இயக்கிய படம் இது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…