தன்னம்பிக்கையின் மறு உருவம் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் தான்..! அதற்கு அவர் உடலே சாட்சி..!!!
நடிகர் அஜீத் ஏன் நடிகர் விஜய் போன்று தன் உடலை சிறப்பாக வைத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.
இந்த கேள்விக்குரிய பதிலை மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு பேட்டியில் நகைச்சுவையாக சொன்னதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இவர மாதிரி முதுகுல டாக்டர்கள் ஆப்பரேஷன் கத்துக்கிட்டது வேற யாருகிட்டயுமே இல்ல. ஒரு ஏரியா விடாம ஆப்பரேஷன் பண்ணிருக்காரு.
இவர தல தலனு சொல்றாங்க. ஆனா இவருக்கு தலைக்கு கீழ தான் நிறைய ப்ராப்ளம்ஸ். அதெல்லாம் எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு நிக்குறாரு.
ஆம். 1993 ஆம் ஆண்டு அஜித் நடித்த முதல் தமிழ் படமான அமராவதி. இது வெளியான போது அவருக்கு வயது வெறும் 21. யார் இந்த சின்ன பையன் அழகா இருக்கான். நடிக்கிறான் என படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தது.
பைக் ரேஸிங்கில் கலந்துகொண்டபோது, மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் முழுமையாக பெட் ரெஸ்ட் எடுத்தார். எழுந்து நிற்கவே சிரமம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
அப்போது அவருக்கு ஆரம்பித்தது இந்த ஆப்பரேஷன்...சர்ஜெரி எல்லாம். இதுவரை கிட்டத்தட்ட 14 சர்ஜெரிகள் நடந்துள்ளது. அதில் மூன்று முதுகுத்தண்டுவடத்தில். குறிப்பாக, ஸ்பைனில் எல் 4,எல் 5 என இரண்டு டிஸ்க் பிளேட்கள் இவருக்கு செயற்கையாக பொருத்தப்பட்டது.
இந்த இரண்டு டிஸ்க் பிளேட்கள் மிக முக்கியமானவையாம். உடல் எடையை தாங்கிப் பிடித்து ஷாக் அப்சார்பராக பயன்படுமாம். இதில் பிரச்சனை வந்தால் எழுந்து நிற்பதே சிரமம். இதனால் இவர் தொடர்ந்து மருந்துகள்,ஸ்டெராய்ட்ஸ் என தொடர்ந்து மெடிகேஷனில் இருக்கும் நிலைக்கு ஆளானார். இதன் சைட் எபக்ட்டால் உடல் எடை கூட ஆரம்பித்தது.
இவரின் உருவ தோற்றத்தை பார்த்து பலரும் விமர்சனமும் கிண்டல் செய்தனர். மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தாலும், மருத்துவ ஆலோசனையுடன் டயட்டில் இருந்து ஒரே அடியாக 23 கிலோ குறைத்து அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார். பரமசிவன், திருப்பதி படங்கள் வெளியான நேரமது.
கிரீடம், பில்லா திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் எடை கூடத் தொடங்கியது. ஆரம்பம் திரைப்படத்தில் போலீஸ் ஆபிசர் ரோல் என்பதால் மீண்டும் எடையை குறைக்க நினைத்தார் அஜீத்.
555 படத்தில் நடிகர் பரத்தின் ஜிம் மாஸ்டர் சிவாவை அணுகி, ஜிம்மில் தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி செய்தார். ஐபிஎஸ் ஆபிசராக நடித்துக்கொண்டிருக்கும் போது, ஷ_ட்டிங் ஸ்பாட்டில் பயங்கர விபத்து.
நடிகர் ஆர்யா காரை வேகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் போது, காரின் முன்புறம் அஜீத் தொற்றிக் கொண்டு வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, அஜீத்தின் கால், காரின் சக்கரத்தில் இடறி விபத்து ஏற்பட்டு காலில் பிளேட் வைத்து சர்ஜெரி செய்யப்பட்டது.
அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தில் மீண்டும் அதே இடத்தில் அடிப்பட்டு மீண்டும் அதே இடத்தில் சர்ஜெரி. விவேகம் திரைப்படத்தில் தோள்பட்டையில் சர்ஜெரி. வலிமை திரைப்படத்திலும் பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து.
பில்லா இரண்டாம் பாகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கி சண்டை போட்டதாக இருக்கட்டும். வீரம் திரைப்படத்தில் ஓடும் ரயிலில் தொங்கிய படி ஸ்டண்ட் என ஒவ்வொரு படத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார்.
அதில் ஏற்பட்ட விபத்துகளால் தொடர்ந்து சர்ஜெரிகள் மற்றும் மெடிகேஷனில் இருக்கும் நிலை என்பதால் உடல் தோற்றத்தை தொடர்ச்சியாக சிறப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை.
எழுந்து நிற்கவே முடியாத நிலையில், பல்வேறு விமர்சனங்களை கடந்து இன்றைக்கு இவர் எட்டிய உயரத்திற்கு இவரின் தன்னம்பிக்கையே காரணம். அவர் எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையில்லை.