சினிமாவை புரட்டி போட்ட கமல்! இசையமைக்காதது மட்டும் ஏன்? அவரே கூறிய காரணம்
இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் பலர் கமல்ஹாசனை முன்னுதாரணமாக வைத்து தான் சினிமாவிற்குள்ளேயே நுழைகின்றனர். அவருடைய நடிப்பு அவருடைய கடின உழைப்பு விடாமுயற்சி சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட குணம் இவைகளை பார்த்து பார்த்து ஏராளமான இளம் தலைமுறையினர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகின்றனர்.
கமலின் ரசிகர்கள் என சொல்வதை பெருமையாக கொள்கிறோம் என்று எத்தனையோ பிரபலங்கள் தங்கள் பெட்டிகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர். உதாரணமாக இயக்குனர் லோகேஷ், நடிகர் மணிகண்டன், நடிகர் சித்தார்த் இவர்கள் வெளிப்படையாகவே நாங்கள் கமலின் தீவிர ரசிகர்கள் என்று பல மேடைகளில் சொல்லியிருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
சினிமாவில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தவர் கமல். ஒரு இலக்கியவாதியாக அரசியல்வாதியாக நாத்திகனாக அனைவரையும் ஈர்த்து வருகிறார் கமல். சினிமாவைப் பற்றி தெரியாதது ஒன்றும் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு அத்தனை துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
நல்ல ஒரு டான்சர், ஒரு பாடகர், ஒரு பாடலாசிரியர் ,நல்ல நடிகன், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லா துறைகளிலும் கால் பதித்த கமல் இசையின் பக்கம் மட்டும் இதுவரை வந்ததில்லை .ஆனால் இசையை பற்றிய அத்தனை கருவிகளையும் நன்கு அறிந்தவர் கமல். இதைப் பற்றி ஒரு பேட்டியில் அவரிடம் "இத்தனையும் அறிந்த நீங்கள் ஏன் இதுவரை ஒரு படத்தில் கூட இசையமைக்கவில்லை" என ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கமல் "எனக்கு வீணை வாசிப்பது என்பது மிகவும் பிடிக்கும் .ஆனால் சிட்டிபாபு ,வைத்தியநாதன் இவர்கள் எல்லாம் வீணை வாசிப்பதில் மிகவும் வல்லவர்கள். அவர்கள் இருக்கும் போது நாம் சும்மா போய் எதையாவது அடித்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது .அது மட்டும் இல்லாமல் ஒரு போன் பண்ணினால் இளையராஜாவிடம் என்னால் பேச முடியும் , அனிருத்திடம் பேச முடியும், ரஹ்மானிடம் பேச முடியும். ஒரு விஷயம் நமக்கு நன்றாக இல்லை என் தோன்றினால் அதை நாம் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் நான் சொன்ன அத்தனை பேரும் நெருங்க முடியாத ஒரு கடலாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் போது நாம் ஏன் இசையமைக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது. நாம் வெளியில் இருந்து ரசித்துக் கொண்டே இருப்போம்" என்ற காரணத்தினால் தான் நான் அந்தப் பக்கம் போகவே இல்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க : டபுள் இல்ல.. டிரிபிள் ட்ரீட்! விஜயின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து