என் படத்தில வேணா வில்லனாக நடிக்க சொல்லுங்க... ரஜினிகாந்தை அசிங்கப்படுத்திய முக்கிய பிரபலம்...

by Akhilan |
என் படத்தில வேணா வில்லனாக நடிக்க சொல்லுங்க... ரஜினிகாந்தை அசிங்கப்படுத்திய முக்கிய பிரபலம்...
X

நடிகர்களில் சிலர் முஸ்தபா சொல்லும் அளவுக்கு நண்பர்களாக இருந்தாலும், சில இகோ கிளாஸ்களும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அதிலும், 80ஸ்களில் இருந்து இன்று வரை ஓயாமல் புயல் வீசிக்கொண்டு இருக்கும் ஒரு செய்தி தான் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் மோதல்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் ரஜினிக்கும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டுள்ள சத்யராஜிற்கும் ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.

1986-ம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர்.பாரத்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று இருப்பார். அப்படத்தினை போலவே சத்யராஜிற்கும், ரஜினிக்கும் ஆகாதாம். எப்பவும் எதிருபுதிருமாக இவர்கள் இருப்பதற்கு மாநில பிரச்சனை தான் காரணம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சனையின் போது சத்யராஜ் மேடையிலேயே ரஜினிகாந்த்தை வெளிப்படையாக விமர்சித்தார். இது அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் ரஜினியை சீண்டிக்கொண்டே இருந்தார். சமீபத்தில் கூட, ஒரு பேட்டியில் நடிகரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவதை நிறுத்துங்கள் என ஆவேசமாக கூறினார்.

மீண்டும் அரசியல் குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நல்ல நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். இதைப்பற்றி மட்டும் பேசுங்கள். இதற்கு பதில் அளித்தால், அடுத்து உச்சப்பட்ச நடிகர் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்பீர்கள். அதையெல்லாம் சொல்லுவதற்கா, நான் இங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என்றார். இது நேரடியாக ரஜினியை தாக்கத்தான் சத்யராஜ் அப்படி பேசினார் என்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது, ரஜினியை என் படத்தில் வேண்டும் என்றால் வில்லனாக நடிக்க சொல்லுங்கள். நான் தருகிறேன் வாய்ப்பு என சத்யராஜ் கூறி இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதாவது, ரஜினி நடிப்பில் சிவாஜி வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் சுமன் வில்லனாக நடித்திருப்பார். ஆனால், சுமனுக்கு பதில் சத்யராஜை தான் படக்குழு வில்லனாக்க முடிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜி கமலுக்கிட்ட சொல்ல சொன்ன விஷயத்தை அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த்…!

Next Story