Cinema News
கிரேட் எஸ்கேப்!.. சூர்யா படம் தள்ளி போனதுக்கு இதுதான் காரணமாம்..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளர். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பிப்ரவரி 14ம் தேதி தள்ளி சென்றுவிட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் ஏன் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது. பொங்கலுக்கு அஜித்தின் வலிமை வருகிறது. அப்படத்துடன் போட்டி போடுவது சரியல்ல. மேலும், அதிக தியேட்டர்கள் ‘வலிமை’ படத்திற்கு ஒதுக்கப்படும். அதேபோல், தெலுங்கில் சூர்யாவுக்கு ஒரு மார்க்கெட் உண்டு.
ஆனால், ஜனவரி 14ம் தேதி ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் என 2 படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் ஆகிறது. தமிழிலும் இப்படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. எனவே, அப்படங்களுக்கும் கணிசமான தியேட்டர்கள் சென்றுவிடும். அதோடு, ஆந்திராவில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு சொற்பமான தியேட்டர்களே கிடைக்கும்.
இதையெல்லாம் கணக்கு போட்டுதான் பிப்ரவரி 14ம் தேதிக்கு எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பெரிய படங்கள் எதுவுமில்லை என்பதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.