தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் எடுக்க ஏராளமான இயக்குனர்கள் மணிக்கணக்கில் காத்துக் கொண்டு இருக்கின்றனர். விஜயின் படங்கள் பெரும்பாலும் வசூலில் வாரி இறைக்கும்.

பிசினஸிலும் நல்ல ஒரு கலெக்ஷனை அள்ளித் தரும். அதனாலேயே பல இயக்குனர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் லோகேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். ஏற்கனவே இருவரும் மாஸ்டர் படத்தின் மூலம் இணைந்து நல்ல ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கின்றனர். அதனால் இந்த முறையும் அவர்களின் கூட்டணி மேல் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது.
இந்த நிலையில் விஜயை வைத்து படம் இயக்குவதாக இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். விஜய் துப்பாக்கி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கௌதம் மேனன் அவரை அணுகியிருக்கிறார். யோகன் என பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியானது. அதுவும் விஜய் இடம் கேட்டு அனுமதி பெற்ற பின்னரே வெளியிடப்பட்டதாம்.

ஆனால் யார் கண் பட்டதோ அந்தப் படம் அப்படியே நின்று விட்டது என கௌதம் மேனன் கூறினார். அந்தப் படத்தை ஒரு இன்டர்நேஷனல் அளவில் எடுக்க வேண்டும் என எண்ணியதாகவும் ஒரு ஜேம்ஸ் பாண்ட் தரத்தில் எடுக்க நினைத்ததாகவும் கூறினார் கௌதம் மேனன். மேலும் விஜய்யும் அந்தப் படத்தை பற்றி” இந்தப் படம் முழுவதுமாக ஆங்கிலம் கலந்த ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாகவும் இப்பொழுது வேண்டாம். தக்க நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகவும்” கௌதம் மேனன் கூறினார்.
இதையும் படிங்க : முடிவை மாற்றிய கோபி!.. பாக்யலட்சுமி சீரியல விட்டு விலகல.. என்ன காரணம்னு தெரியுமா?..
