gautham
Gautham vasudev Menon: மின்னலே திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கௌதம் மேனன். பெரும்பாலும் காதல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுப்பதில் மிகச்சிறந்த இயக்குனர் கௌதம் மேனன். இவர் படங்களை பார்ப்பவர்கள் நிச்சயமாக் உருகித்தான் போவார்கள். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை குறிப்பிடலாம்.
இந்த படங்களில் எல்லாம் காதல் காட்சிகளை எப்படியெல்லாம் படமாக்கியிருப்பார் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். டையலாக் டெலிவரியும் இவர் படத்தில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் . படத்தை பார்த்தாலே இது கௌதம் மேனன் படம் என்று கண்டுபிடித்து விடலாம். இயக்குனராகவும் அவர் பணியை சிறப்பாக செய்தார். இப்போது ஒரு நடிகராகவும் கௌதம் மேனன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
இதையும் படிங்க: இவ்வளவு டைட்டா போட்டா ஹாட் பீட் எகிறுது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் தமன்னா!..
குணச்சித்திர நடிகராக வில்லன் நடிகராக என எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் லியோவில் நடித்ததை பற்றி அவரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதாவது உங்க படத்தில் விஜய் நடிக்க மறுத்தும் எப்படி அவருடன் சேர்ந்து நடிக்க சம்மதித்தீர்கள்? என்ற கேள்வியை கேட்டார்.
அதற்கு பதிலளித்த கௌதம் வாசுதேவ் மேனன் எல்லாம் லோகேஷுக்காகத்தான் என்று மிகவும் வெளிப்படையாக பதில் கூறினார். ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிக்கவே கௌதம் மேனனை லோகேஷ் அழைத்தாராம். அப்போது வேறு படங்களில் மிகவும் பிஸியாக இருந்ததனால் கௌதம் மேனனால் நடிக்க முடியவில்லையாம்.
இதையும் படிங்க: நீ பெரிய ஆளா மாறுவ? இது நடந்தா எனக்கு கால்ஷூட் வேணும்… அஜித்தை லாக் செய்த இயக்குனர்….
லியோ படம் கையெழுத்தானதும் உடனே கௌதம் மேனனுக்கு தொலைபேசியில் அழைத்து இதில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என லோகேஷ் சொல்லியிருக்கிறார். அதன காரணமாகவே தான் கௌதம் மேனன் லியோவில் நடித்தாராம். கௌதம் மேனன் விஜயை வைத்து யோகன் என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால் அதில் நடிக்க முடியாது என சொல்லி விஜய் விலகி விட்டார். அதை குறிப்பிட்டே ரசிகர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில்…
பொதுவாக சினிமா…
சின்ன பட்ஜெட்டில்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் விஜய்…