கலையை வளர்க்கவா வந்தேன்?.. அட போங்கடா!. சினிமாவிற்குள் வந்த காரணத்தை வெளிப்படையாக கூறிய ஜெய்சங்கர்!..
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற மனிதராக நல்ல பண்பாளராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் ஜெய்சங்கர். நாடகமேடையில் இருந்து வெள்ளித்திரைக்கும் நுழைந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைத்தாலும் தன் தாய்வீடான நாடக மேடையிலும் அவ்வப்போது நாடகங்களை ஏற்று நடித்துக் கொண்டு வந்தார்.
போற்றும் கலைஞன் ஜெய்சங்கர்
தன்னை தூக்கி விட்டதே நாடகம் தான் என அந்த ஒரு நன்றிக் கடனுக்காக நாடகங்களில் நடித்து வந்தார். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அழைக்க்ப்பட்டவர் ஜெய்சங்கர். அவர் நடிக்கும் படங்களின் பெரும்பாதி துப்பறியும் கதாபாத்திரமாகவே இருக்கும். உண்மையான சிபிஐ ஆஃபிஸராகவே மக்கள் மத்தியில் பிரதிபலித்தார்.
வெள்ளிக்கிழமை நாயகன் என போற்றப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் வருடத்திற்கு 20 படங்கள் வீதம் அதிக படங்களில் நடிக்கும் நாயகன் என வலம் வந்ததால் வாரத்திற்கு ஒரு படம் என ரிலீஸ் ஆகிக் கொண்டே இருக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் ஜெய்சங்கரின் படம் வெளியாகும்.
அதிருப்தி அளித்த பேச்சு
அவரின் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா படங்களாகவே அமைந்தன. இந்த நிலையில் ஒரு பத்திரிக்கையில் பேட்டி அளித்த ஜெய்சங்கர் ‘ நான் கலையை வளர்க்க சினிமாவிற்குள் வரவில்லை’ என்ற தன் கமெண்டை பதிவு செய்திருந்தார். இந்த ஒரு பேட்டி அப்போது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் பேசும் படம் பத்திரிக்கை அதற்கு ஒரு சரியான பதிலை பதிவிட்டிருந்தது. அதாவது ‘ஜெய்சங்கர் சொன்னதில் எந்த தவறுமில்லை, தன் மனதில் பட்டதை பேசும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது, அதே போல் தான் ஜெய்சங்கர் தன் மனதில் தோன்றியதை கூறியிருக்கிறார்’ என்று அதற்கான பதிலை அளித்திருந்தது.
சினிமாவிற்குள் வந்த காரணம்
ஆனால் ஜெய்சங்கர் தான் கூறியதை பற்றி பல மேடைகளில் விவரித்திருக்கிறார். அதாவது ‘கலையை வளர்ப்பது என் எண்ணம் இல்லை,சினிமாவில் ஓரளவு புகழும் பேரும் வந்த பின் அதை வைத்து என்னால் முடிந்தளவு பல பேருக்கு உதவியை செய்யவேண்டும், என் பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை கொடுக்க வேண்டு.
மேலும் என் பிள்ளைகளுக்காக சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்றும் நான் நினைத்ததில்லை. எனக்கு ஒரு வீடு ஒரு கார் போதும். என் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுத்து விட்டால் அதை வைத்து அவர்கள் பின்னாளில் பொழைத்துக் கொள்வார்கள், அதனாலேயே நான் சினிமாவிற்குள் வந்தேன்’ என்று பல தடவை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அவர் கூறியதை போல் ஜெய்சங்கரின் மூத்த மகன் விஜய் சங்கர் சென்னையில் ஒரு மிகச்சிறந்த கண்மருத்துவராக இருக்கிறார், இளையமகன் பொறியாளராக இருக்கிறார், அவரின் மகள் சங்கீதா அப்போல்லாவில் மருத்துவராக இருக்கிறார்.பிள்ளைகள் விஷயத்தில் ஜெய்சங்கர் ஒரு சரியான தந்தையாகத்தான் இருந்திருக்கிறார். இந்த சுவாரஸ்ய செய்தியை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததால் கோபித்துக்கொண்டு கிளம்பிய ஸ்ருதிஹாசன்…இது எப்ப நடந்தது தெரியுமா?…