நயன்தாராவை அந்த விஷயத்துக்காக மட்டும் தான் செலெக்ட் செஞ்சேன்.. சீக்ரெட் உடைத்த 'யானை' ஹரி.!

by Manikandan |
நயன்தாராவை அந்த விஷயத்துக்காக மட்டும் தான் செலெக்ட் செஞ்சேன்.. சீக்ரெட் உடைத்த யானை ஹரி.!
X

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கமர்சியல் ஆக்சன் திரைப்படத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஹரி. சில வருடங்களாக ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்த அவருக்கு யானை திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. மீண்டும் தான் ஒரு கமர்சியல் குடும்ப செண்டிமெண்ட் ஹிட் இயக்குனர் என்பதை யானை திரைப்படம் மூலம் நிரூபித்துள்ளார் ஹரி.

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது, தனது பழைய திரைப்படங்கள் குறித்தும், திரை அனுபவங்கள் குறித்தும் விரிவாக பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாரா பற்றி கேட்கப்பட்டது. நயன்தாரா ஹரி இயக்கிய ஐயா திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நயன்தாரா பற்றி அவர் கூறுகையில், ' நான் ஐயா திரைப்பட கதையை எழுதி முடித்தவுடன், கதைப்படி அந்த பெண்ணிற்கு 17 வயது தான் ஆகியிருக்க வேண்டும். அதனை மக்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆதலால் புதுமுக நடிகை மட்டுமே வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி நான் கதாநாயகியை தேடி வந்தேன்.

இதையும் படியுங்களேன் - எப்படி இருந்த அஞ்சலி இப்படி மாறிட்டிங்களே... போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

அப்போதுதான் நயன்தாரா நடித்த படங்களின் 2 சிடியை கொடுத்தார்கள். நான் படம் பார்த்தேன். உடனே இவர் தான் என் பட ஹீரோயின் என்பதை முடிவு செய்துவிட்டு அட்வான்ஸ் செக் வாங்கி கொண்டுதான் நயன்தாராவை சந்திக்க சென்றேன். கதையை கூறியதும் நயன்தாரா சம்மதித்து விட்டார்.

பின்னர் தான் நாங்கள் ஐயா திரைப்படத்தை எடுத்தோம் நயன்தாரா இந்த திரைப்படத்தை நடித்தது எங்கள் கதைக்கு மிகவும் பிளஸ் ஆக இருந்தது. அதுவும் அந்த, ' ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்.' எனும் பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. என பழைய நினைவுகளை விரிவாக பேசியிருந்தார் இயக்குனர் ஹரி.

Next Story