நான் ஏன் கமலை வச்சு படம் எடுக்கல?.. ஏஆர்.முருகதாஸ் சொன்ன சூப்பர் தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 60ஆண்டுகால பயணங்களில் சினிமாவை பற்றிய நுணுக்கங்களை கரைத்து குடித்தவர் கமல். சிவாஜி, ஜெமினி என தனக்கு முந்தைய நடிகர்களின் வாழ்க்கையிலும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்.
ஹீரோவாக களமிறங்கி முன்னனி நடிகராக வலம் வருகையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இவரை துரத்திக் கொண்டிருந்தன. பாலசந்தரால் ஒரு முழு ஹீரோவாக களமிறக்கப்பட்டார் கமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் தனது பங்கினை கொடுத்தார்.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களோடும் இணைந்து பணியாற்றியிருக்கிறார் கமல். இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸுடன் ஒரு பேட்டியில் சந்தித்த போது அஜித், விஜய், ரஜினி என மாஸ் ஹீரோக்களை வைத்து படத்தை கொடுத்த நீங்கள் ஏன் கமலுடன் மட்டும் சேர வில்லை என்று கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த முருகதாஸ் ‘எனக்கு சிறு வயதில் இருந்தே கமல் என்றால் பயம், மேலும் அஜித் , விஜய் இவர்கள் நடிக்க வரும் போது நான் அப்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தேன், அதனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கமல் சார் படம் என்றால் அந்த நேரம் அவரை எங்கேயோ இருந்து ரசித்து கொண்டிருப்பேன், இருந்தாலும் வாய்ப்புகள் சரியாக வரும் போது பயன்படுத்திக் கொள்ளவேண்டும்,
மேலும் அந்த நேரங்களில் கமலுடன் பணிபுரிந்த டாப் 20 இயக்குனர்களின் கெரியரில் தி பெஸ்ட் மூவி என்றால் அது கண்டிப்பாக கமலின் ஒரு படம் இருக்கும், கே விஸ்வனாதன், கேபி, பாலு மகேந்திரா, மணி ரத்னம், சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் இவர்களின் படங்களில் தி பெஸ்ட் மூவி என்றால் கமல் படம் இருக்கும்’ என்று கூறி வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடக்கும் என கூறினார்.
இதையும் படிங்க : பைத்தியமா அவருக்கு?.. அதெல்லாம் சரிவராது.. ரஜினியின் ஐடியாவுக்கு முட்டுக்கட்டை போட்ட கமல்!..