ஆல் டைம் நண்பர் விஜய் மட்டும்தான்!.. ஏன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. லாரன்ஸ் சொன்ன சூப்பர் தகவல்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இப்போது ஒரு வசூல் மன்னனாக வலம் வரும் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் விஜய் மக்கள் இயக்கம் என தனது வாழ்க்கையை மிகவும் பரபரப்பாக நகர்த்திக் கொண்டே செல்கிறார்.
இந்த நிலையில் விஜயை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் லாரன்ஸ் சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். அதாவது சினிமாவில் ஆல் டைம் நண்பர் விஜய் மட்டும் தானாம். லாரன்ஸுக்கு ஆன்மிகம் மீதில் அளவுக் கடந்த நம்பிக்கை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே மிகவும் அமைதியாக இருப்பாராம்.
அதே போல் விஜயும் இயல்பாகவே அமைதியானவர் என்றும் நிறைய பேர் சொல்லிட்டு அமைதியாக இருப்பார்கள், ஆனால் விஜய் செய்துவிட்டு அமைதியாக இருப்பார் என்று கூறினார். அதாவது வெளியில் தெரியாமலேயே நிறைய உதவிகளை செய்வாராம் விஜய்.
லாரன்ஸ் அவரின் டிரஸ்ட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதாவது உதவிகள் வேண்டுமென்றால் உடனே விஜய்க்கு தான் போன் செய்வாராம். அடுத்த நிமிடமே தேவையான உதவிகள் விஜய் வீட்டில் இருந்து வருமாம். அதே போல அந்த குழந்தைகள் எல்லாம் விஜயின் தீவிர ரசிகர்களாம்.
அதனால் விஜயின் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுவார்களாம். உடனே இதை விஜயிடம் தெரிவித்தால் அந்த குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோவையே ஏற்பாடு செய்து கொடுப்பாராம் விஜய்.
அந்த மாதிரி விஷயங்களில் ரஜினியும் விஜயும் ஒன்று தான். அதாவது இருவரும் உதவி வேண்டுமென்றால் ஓடி வந்து செய்யக் கூடியவர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க : பன்முகத் திறமைகள் கொண்ட தமிழ் நடிகர்கள்!.. குறுகிய காலத்தில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்..
அதுமட்டுமில்லாமல் லாரன்ஸ் தெலுங்கில் பல நடிகர்களுக்கு மாஸ்டராக இருக்கும் போது மிகவும் பிஸியாக இருப்பாராம். அந்த சமயத்தில் தமிழ் நடிகர்களுக்கு லாரன்ஸ் தான் பண்ண வேண்டும் என்ற நிலை வரும் போது யாருக்கும் பண்ண முன்வரமாட்டாராம். ஆனால் விஜய் படம் என்றால் உடனே வந்து கொரியோகிராப் பண்ணிக் கொடுப்பாராம். அவ்ளோ ஸ்பெஷல் விஜய் எனக்கு என்று லாரன்ஸ் கூறினார்.