பில்லா திரைப்படத்தில் நாயகியாக ஜெயலலிதா நடிக்க மறுத்தது ஏன்... சுவாரஸ்ய பின்னணி

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த பில்லா படத்தில் முதலில் ஜெயலலிதாவினை தான் அணுகினராம். ஆனால் ஏன் அவர் நடிக்கவில்லை என்ன ஆனது என்ற முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் திரைப் பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படம் என்றால் பில்லா தான். அதிலும் ரஜினி மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்று கொண்டிருந்த காலத்தில் வெளியாகி வெற்றிக்கண்ட படம். ஆர்.கிருஷ்ணமூர்த்தி இப்படத்தினை இயக்கி இருந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

பில்லா

பில்லா

இப்படம் 1978-ல் ‘டான்’ என்கிற இந்தித் திரைப்படத்தின் ரீமேக்காகும். சலீம்-ஜாவேத் என்கிற இரட்டையர்கள் கதையை இரானியின் உதவியாளரான சந்திரா பரோட் சில மாற்றங்களைச் செய்து இயக்கினார்.

இந்நிலையில், தமிழில் இப்படத்தில் நாயகியாக ஸ்ரீபிரியாவிற்கு முன்னர் ஜெயலலிதாவை தான் அணுகியிருக்கிறது படக்குழு. ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். சினிமாவினை விட்டு விலகி அரசியலில் உயர்ந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவருக்கு சினிமா வாய்ப்பு இல்லை என்று தான் இங்கு வந்திருப்பதாக ஊடகம் ஒன்று அவரை விமர்சித்தது.

பில்லா

ஜெயலலிதா

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'பில்லா' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, என்னிடம் கேட்டார். நான் மறுத்த்தால் தான் ஸ்ரீப்ரியாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின்'பில்லா' நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே எனக் கடிதம் எழுதி இருந்தார்.

Related Articles
Next Story
Share it