சிவக்குமார் மீது இருந்த கோபமா? ரெட்ரோ பட விழாவிற்கு ஜோதிகா வராத காரணம்!

by Rohini |   ( Updated:2025-04-21 00:06:17  )
jyothika_siva
X

jyothika_siva

Jyothika: சமீபத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது சூர்யா குடும்பத்தில் இருந்த அனைவரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். ஆனால் ஜோதிகா மட்டும் வரவில்லை. அதற்குக் காரணம் ஜோதிகாவிற்கு சென்னை வர பிடிக்கவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சென்னை வர பிடிக்கவில்லை என்பதை தாண்டி தன்னுடைய மாமனார் மாமியார் ஆன சிவக்குமார் அவருடைய மனைவியை பார்ப்பதற்கு ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லை.

ஏனெனில் சிவக்குமாருக்கு ஜோதிகா சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. இப்படி ஜோதிகாவுக்கும் சிவக்குமாருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம் என்று சொல்வார்கள் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடித்தால் போதும் என்று சொன்னார்கள். அப்படியே இரண்டு மூன்று படங்கள் என தொடங்கி ஹிந்தி, மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் ஜோதிகா. இது சிவகுமாருக்கு ஒரே மன உளைச்சல் ஆகிவிட்டது.

வெளியில் சொன்னால் நான்கு பேர் தப்பாக பேசுவார்கள் என்று நினைத்து அவர் எதுவுமே சொல்லவில்லை .ஆனால் சென்னையில் டி நகரில் உள்ள தன்னுடைய வீடு பக்கத்தில் பெரிய இடத்தை வாங்கி அதில் கார்த்தி குடும்பம் சூர்யா குடும்பம் சிவகுமார் அவருடைய மனைவி என இப்படித்தான் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தார் சிவக்குமார். ஆனால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை ஜோதிகா.

ஏனெனில் தன்னுடைய கணவரையும் குழந்தைகளையும் மும்பையிலேயே செட்டில் பண்ண வேண்டும் என முடிவு செய்துவிட்டார். அதனால் மும்பையிலேயே ஒரு பெரிய வசதியான வீடு வாங்கி விட்டார் ஜோதிகா. அது மட்டுமல்ல மிகப்பெரிய ஒரு ஆடம்பரக்காரையும் ஜோதிகா வாங்கி கொடுத்து விட்டார் .விரைவில் சூர்யாவையும் ஹிந்தி படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இதெல்லாம் சிவகுமாருக்கு பிடிக்காது .சிவக்குமார் ஆரம்பத்தில் ஒரு பியட் காரை பயன்படுத்தி வந்தார். அதை இப்பொழுது வரை தன்னுடைய வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். இப்படி எந்த ஒரு ஆடம்பர செலவும் இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறார் சிவக்குமார். ஆனால் அதற்கு நேர் எதிராக இருக்கிறார் ஜோதிகா. இன்னொரு பக்கம் ஓட்டு போடவும் ஜோதிகா வரவில்லை. கராத்தேயில் தன்னுடைய மகன் பெல்ட் வாங்கியதை பார்க்கவும் ஜோதிகா வரவில்லை.

ஆனால் தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் தன்னுடைய மகன்கள் பள்ளி விழா என்றால் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி ஆனாலும் தன்னுடைய மகன்களுக்காக இரண்டு பேரும் வந்து கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஜோதிகா அப்படி இல்லை. மொத்தத்தில் அவருக்கு சென்னை வருவதே பிடிக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Next Story