Cinema News
ரஜினிக்கு வாழ்த்து கூறாத கமல்ஹாசன்… இதுதான் காரணமா?…
கடந்த 47 வருடங்களாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சினிமா உலகில் அவரை சேவையை பாராட்டி அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அந்த விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் என பலரும் ரஜினிக்கு வாழ்த்து கூறினர். ஆனால், ரஜினியின் சம கால நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் இதுவரை ரஜினிக்கு எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. அவர் வழக்கமாக கருத்து தெரிவித்து வரும் டிவிட்டரில் ஒரு டிவிட் கூட அவர் போடவில்லை.
திரைத்துறையில் ரஜினியோடு ஒப்பிட்டால் கமல்ஹாசன் சிறந்த நடிகர்தான். அதில் சந்தேகம் ஏதுமில்லை. இதை ரஜினியே பல மேடைகளில் பேசியுள்ளார். ஆனால், கமல் அப்படி ரஜினியை பார்க்கவில்லை. தன்னை விட ரஜினி அதிகம் வளர்ந்துவிட்டாரே என்கிற எண்ணம் கமலுக்கு இருப்பதாக தெரிகிறது.
தான் உயிரை கொடுத்து நடித்தால் இந்த மனுஷன் ஸ்டைல் பண்ணியே சூப்பர்ஸ்டார் ஆயிட்டாரே என்கிற எண்ணமும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. இந்த காழ்ப்புணர்ச்சியில்தான் அவர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்ற போது கூட கமல்ஹாசன் பெரிதாக அவருக்கு வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.