கமல்-ரகுவரன் கூட்டணி அமையாததற்கு காரணமே இது தான்.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த ரோகிணி!..
தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக அனைத்து பரிமாணங்களிலும் தனக்கு ஈடு இணை யாருமில்லை என்பதை தன் படங்களின் மூலம் உணர்த்தியவர்.
ஒரு வில்லனாக மிரண்டு வாயடைத்து போன ரசிகர்களை இது போன்ற தந்தை , அண்ணன் நமக்கும் இருக்கமாட்டார்களா என ஏங்க வைத்ததும் அதே ரகுவரன் தான். அந்த அளவுக்கு தன் அசுரத்தனமான நடிப்பால் அனைவரின் நெஞ்சத்திலும் குடிபெயர்ந்தவர் ரகுவரன். ஒரு ஹீரோவுக்கு இணையாக ரசிகர்களை வைத்த பெருமைக்கும் ரகுவரன் சொந்தக்காரராக விளங்கினார்.
இதையும் படிங்க : ஒரு பூச்சிக்காக எம்ஜிஆரின் சூட்டிங்கை கேன்சல் செய்த நடிகை.. இயக்குனரின் சாமர்த்தியத்தால் அசந்து போன புரட்சித்தலைவர்!..
இன்று வரை அவரை திரையில் பார்த்தாலே விசில் அடிக்கும் கூட்டம் அலைமோதும். மேலும் ரஜினியின் மிகவும் விரும்பப்படும் நடிகர்களின் பட்டியலில் ரகுவரனுக்கும் முக்கியமான இடம் எப்பொழுதும் உண்டு. ரஜினியுடன் சேர்ந்து வில்லனாக அருணாச்சலம், முத்து,பாட்ஷா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் புள்ளிகளாக இருக்கும் ரஜினி , கமல் ஆகியோரில் இதுவரை கமல் கூட மட்டும் ரகுவரன் நடித்ததே இல்லை. இதை பற்றி ரகுவரனின் மனைவியும் நடிகையுமான ரோகினியிடம் கேட்டபோது நாயகன் படத்தில் நாசர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்க வேண்டியது ரகுவரன் தானாம்.
அப்போது வேறொரு படத்திற்காக ரகுவரன் நீளமான முடி வளர்ந்திருந்ததால் நாசர் நடிக்க வேண்டியதாக ஆகிவிட்டதாம். மேலும் கமல் , ரகுவரன் இருவருமே நல்ல நடிகர்கள். எங்கே தன்னுடன் ரகுவரன் சேர்ந்து நடித்தால் தன்னுடைய நடிப்பு பேசப்படாமல் போய்விடுமோ என்று கமல் எண்ணியதாகவும் அந்த சமயம் பல கருத்துக்கள் வந்தன.
ஆனால் உண்மையிலேயே அந்த மாதிரியான வாய்ப்பு அமையவில்லை.மேலும் கமலும் அதே தான் கூறினார். மேலும் ரகுவரன் கூட படத்தில் கூட நடிக்க வில்லையே என்று வருந்தி கூறியிருக்கிறார் என்று ரோகினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.