More
Categories: Cinema History Cinema News latest news

இதனால்தான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கவில்லை… கமல் சொன்ன ஷாக் நியூஸ்

ஷங்கர் முதலில் ஜென்டில்மேன் படத்திற்கு கமலை தான் நாடி இருக்கிறார். ஆனால் கமலோ என்னால் நடிக்க முடியாது எனக் கூறி விலகிவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தான் ஜென்டில்மேன். இந்த படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார். K. T. குஞ்சுமோன் இந்த படத்தினை தயாரித்து இருந்தார். இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, சுபாஸ்ரீ, எம்.என்.நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினீத் மற்றும் ராஜன் பி.தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இது பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழைகளுக்கு அவர்களின் கல்விக்காகக் கொடுக்கும் கதை பின்னணியை கொண்ட படம்.

Advertising
Advertising

Gentleman

ஜென்டில்மேன் 30 ஜூலை 1993ல் வெளியிடப்பட்டது. முதலில் இந்த படத்தினை வெளியிட விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டியதால் குஞ்சுமோனால் விநியோகிக்கப்பட்டது. இருந்த போதிலும், திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இசை மற்றும் ஒலிப்பதிவினை ஏ.ஆர்.ரஹ்மான் செய்தார். வாலி எழுதிய “சிக்கு புக்கு ராயிலே” மற்றும் “பார்க்காதே” தவிர மற்ற அனைத்துப் பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: சந்திரபாபுவின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த சிவாஜி….படத்திற்கு விளம்பரமோ அபாரம்…!

Gentleman

இப்படத்திற்கு முதலில் ஷங்கர் நடிக்க வைக்க விரும்பியது கமலை தான். அவரிடம் இந்த கதையை கூறிய போது அவர் மறுத்து விட்டாராம். அதில் பேசி இருக்கும் அரசியலில் இப்போது நடிப்பது தனக்கு சரியாக படவில்லை எனக் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், கமலிடம் கூறிய ஜென்டில் மேன் கதை வேறாம். அதில் சொல்லப்பட்ட பிராமணப் பிள்ளை கதாபாத்திரம் நடிக்கவும் பிடிக்காமல் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். ஆனால் வெளியான ஜென்டில்மேன் படத்தின் கதை வேறு என கமல் தனது பேட்டி ஒன்றில் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan

Recent Posts