விஜய் கட்சி பாடலை விவேக் எழுதக் காரணம் .. இத்தனை விஷயங்கள் இருக்கா?

Vijay: எம்ஜிஆரை அரசியல் களத்தில் நிற்க வைத்ததற்கு அவருடைய படங்கள் எப்படி காரணமாக இருந்ததோ அதை போல அவர் படங்களில் அமைந்த பாடல்களும் ஒரு காரணமாகத்தான் இருந்தது.அப்படிப்பட்ட பாடல்களில் பெரும்பாலான பாடல்களை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அந்த வரிசையில் இப்போது விஜயும் வந்து விட்டார். தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் கட்சிப் பாடலையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய்.

இந்தப் பாடலை எழுதியவர் பிரபல பாடலாசிரியரான விவேக். ஏன் விவேக்கை முக்கியமாக தனது கட்சி பாடலை எழுத சொன்னார் விஜய் என்பதைத்தான் பார்க்க போகிறோம். 2015 ஆம் ஆண்டு எனக்குள் ஒருவன் என்ற படத்தின் மூலம்தான் விவேக் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவரை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இதையும் படிங்க: சிவாஜி படங்களுடன் ஒன்றல்ல… ரெண்டல்ல… 33 முறை மோதிய ரஜினி… துரைக்கு தில்ல பாருங்க…

ஆனாலும் விவேக்கை மக்களிடம் கொண்டு சேர்த்த பாடலாக 36 வயதினிலே படத்தில் வரும் ‘வாடி ராசாத்தி’ பாடல்தான் இருந்தது. இப்படி தொடர்ந்து நேற்று இன்று நாளை, இறுதிச்சுற்று, இறைவி போன்ற படங்களில் சந்தோஷ் நாராயணனுடன் சேர்ந்து பல பாடல்களை எழுதி வரவேற்பை பெற்றார் விவேக்.

அதன் பிறகு விவேக்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படம் மெர்சல். இன்று விஜயின் கட்சி பாடலில் கூட அதே வரிதான் இருக்கும்.ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதி மிகப்பெரிய புகழை பெற்றார் விவேக்.

மெர்சல் படம் வெளியான அடுத்த வருடமே சர்கார் படத்திலும் இவர் பாடல்களை எழுதியிருப்பார். வாக்களிக்கும் முக்கியத்துவத்தை ஒரே வரியில் சொல்லியிருப்பார். அதுதான் ஒரு விரல் புரட்சி. அதை பாடலிலும் கொண்டு வந்தார் விவேக்.

இதையும் படிங்க: அடுத்த பத்து வருஷம் என் வாழ்க்கையே கேள்விக் குறியா போச்சு! SK க்கு என்னாச்சு?

இதே படத்தில் அமைந்த மற்றுமொரு பாடலான டாப்பு டக்கரு பாடல் விஜயின் கட்சி பாடலுடன் பெரும்பாலான இடங்களில் ஒத்துப் போவதை பார்க்கலாம். இதற்கு அடுத்த படியாக பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே பாடலையும் இவர்தான் எழுதினார். இன்று பெரும்பான்மையான பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய பாடலாகவும் இது அமைந்திருக்கிறது.

அதே போல் வாரிசு படத்தில் அமைந்த தீ தளபதி பாடலையும் விவேக்தான் எழுதியிருப்பார். இப்படி விஜயின் பொலிட்டிக்கல் கெரியரை ஒவ்வொரு பாடலின் மூலம் வெளிப்படுத்திய விவேக் ஏன் கட்சி பாடலையும் எழுதக் கூடாது என நினைத்துக் கூட விவேக்கை எழுத வைத்திருப்பார் விஜய் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணனாவது தம்பியாவது.. இந்த விஷயத்தில் உலகநாயகன் தான் கெத்து…

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு தலைவனா விஜயை மக்கள் முன் காட்டியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். தலைவா படத்தில் வரும் தலைவா பாடல்தான் இன்று விஜய் எங்குபோனாலும் ஒலிக்கும் பாடலாகவே மாறியிருக்கிறது.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it