Categories: latest news

வேண்டாத சர்ச்சைகள் வரும்.! மறுத்துவிட்ட சிம்பு.!? வருத்தத்தில் அந்த நடிகர்.!?

வழக்கமாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு சன் டிவியில் விளம்பரங்கள் வருவதும், விஜய் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு விஜய் டிவியில் விளம்பரங்கள் வருவதும் வழக்கமான ஒன்றுதான். அதிலும், ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வந்த பிறகு அதில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி வருவது வழக்கமான ஒன்று தான்.

பூமி, ஓ மணப்பெண்ணே போன்ற படங்கள் வெளியாகும் சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் அப்படங்களின் ட்ரைலர், ப்ரோமோஷன் ஆகியவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அதே போல தனுஷ் நடித்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. உண்மையில் பார்த்தல், இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி வெளியாகும் சமயத்தில் தான் இப்பட ட்ரைலர் வெளியாகி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்களேன் – வலிமைல அஜித் தான் ஹீரோங்கிறதே எனக்கு தெரியாது.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பிரபலம்.!

ஆனால், நாளை தான் இப்பட ட்ரைலர் வெளியாக உள்ளது. காரணம் என்னவென்று விசாரித்தால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்குவது தனுஷின் சக போட்டியாளராக கருதப்படும் சிம்பு தான்.

அதன் காரணமாக தான் மாறன் ட்ரைலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகாமல், நாளை தனியாக வெளியாக உள்ளது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு வேளை சிம்பு, தனுஷ் என இருவரில் யாரேனும் ஒருவர் இந்த ப்ரோமோஷன் வேண்டாம் வேண்டாத சர்ச்சைகள் ஏதேனும் எழும் என மறுத்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

Published by
Manikandan