தளபதி படத்தில் என்னால் நடிக்க முடியாது... நோ சொன்ன மம்முட்டி... ஆனா ஒரு ட்விஸ்ட்...
ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடிப்பில் ஹிட் அடித்த தளபதி படத்தில் நடிக்க மம்முட்டி முதலில் சம்மதிக்கவில்லை என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மகாபாரதம் என்னும் இதிகாசத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் தளபதி. மணிரத்னம் இப்படத்தினை இயக்கி இருந்தார். ரஜினியின் படங்களில் இருந்து இப்படத்தில் ரொம்ப வித்தியாசமான உடல்மொழிக்கு நோ சொன்னாராம் மணிரத்னம். எப்போதும் சாதாரணமாக இருப்பது போல நடிக்க வேண்டும் எனக் கூறினாராம். இதை ரஜினியே பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டில் தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் மற்றொரு மிகப்பெரிய ப்ளஸ் என்றால் மம்முட்டி தான். தேவாவாக அவர் நடிப்பும் கிளாஸ் வகையாக அமைந்தது. இன்றும் நட்புக்கு எடுத்துக்காட்டாக இப்படத்தினை சொல்லும் நிலை இருக்கிறது.
ஆனால் இப்படத்தின் கதையை முதலில் மணிரத்னம் கூறும்போது மம்முட்டிக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். ஆனால் அவரின் நண்பரும், மலையாள இயக்குனருமான ஜோஷி தமிழ் ரசிகர்களிடம் நீங்கள் ரீச்சாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என அட்வைஸ் செய்திருக்கிறார். அதன்பிறகே நடித்தாக தகவல்கள் தெரிவிக்கிறது.