ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே நடிகர்களையும் தாண்டி ஒரு இயக்குநருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜுக்கு மட்டும் தான். அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையுமே அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார்.
எடுத்த ஐந்து படங்களுமே சூப்பர் சூப்பர் ஹிட். அதுவும் விஜய் கமல் ஆகியவர்களை வைத்து ஒரு பிளாக்பஸ்டர் கிட்டை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவையே தன் வசம் திரும்ப பார்க்க வைத்தார். எல்லாவற்றையும் தாண்டி விக்ரம் படம் மாபெரும் பெருமையை லோகேஷுக்கு பெற்று தந்தது.
இதையும் படிங்க : சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தினை தடுத்து நிறுத்தினேனா? இதுதான் நடந்தது ? மனம் திறந்த சிவக்குமார்..
மாநகரம் படத்திற்குப் பிறகு அவர் எடுத்த கைதி திரைப்படம் தான் யார் இந்த இயக்குனர் என்ற ஒரு கேள்வியை பிரபலங்கள் மத்தியில் கேட்க வைத்தது. அந்த அளவுக்கு கைதி படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது மன்சூர் அலிகான் என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இத்தனை ரசிகர்களைக் கொண்ட லோகேஷ் ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்கிறார் என்றால் அது மன்சூர் அலிகானுக்கு மட்டும் தான். அது என்னமோ ஆரம்பத்தில் இருந்தே மன்சூர் அலிகான் என்றால் லோகேஷுக்கு மிகவும் பிடித்தமான நடிகராம். அதை பல மேடைகளில் லோகேஷ் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த சமயத்தில் கைதி படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க முடியாமல் போனது. அதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மன்சூர் அலிகான் இடம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கிறது என்றும் அதில் நீங்கள்தான் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்றும் கூறினாராம்.
இதையும் படிங்க : ஒன்னுக்கொன்னும் சளைச்சது இல்ல! கமலின் சினிமா வாரிசு இவர்தானாம் – உயிரை கொடுத்து நடிச்சதுக்கு கிடைச்ச பலன்
எல்லாம் ஓகே செய்து படப்பிடிப்பு ஆரம்பமாகும் நேரத்தில் பாரதிராஜா சீமான் போன்றவர்கள் ஒரு போராட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட உள்ளனர் என்ற செய்தி மன்சூர் அலிகான் காதுக்கு சென்று இருக்கிறது. அதைக் கேட்டதும் மன்சூர் அலிகானுக்கு ஒரே ஷாக்காம்.
உடனே அந்த இடத்திற்கு சென்று மன்சூர் அலிகான் போராட்டத்தில் குதித்து அவர் ஜெயிலுக்கு சென்றாராம். இதை அந்த பேட்டியில் கூறும்போது பாரதிராஜா கைது செய்யப் போகிறார் என்பதை கேட்டதும் என்னால் தாங்க முடியவில்லை என்றும் உடனே நான் அங்கு சென்று போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை கைது செய்து அழைத்துச் சென்று போய்விட்டனர் என்றும் கூறினார். அதன் காரணமாகத்தான் கைதி படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…
நேற்று சோசியல்…